Wednesday, July 6, 2016

ரெட்பானா கிராமத்தில் இடம்பெற்ற மைதான பெருநாள் தொழுகை (படங்கள் இணைப்பு)

ரெட்பானா கிராமத்தின் பொருநாள் தொழுகை நபி (ஸல்) அவா்கள் காட்டிய வழிமுறையின் படி ரெட்பானா கஜுவத்தை முஸ்லிம் வித்தியாலயத்தில் அமைந்துள்ள மைதானத்தில் காலை 6.45 மணியலவில் இடம்பெற்றது. ஆண், பெண் இரு பாலாரும் கலந்து கொண்ட மேற்படி பெருநாள் தொழுகையை பள்ளியின் இமாம், மௌலவி ஷைபுல்லாஹ் அவா்கள் நடாத்தினார்கள். 

பெருநாள் குத்பா பிரசங்கத்தின் போது இமாம் அவா்கள், ரமழான் விட்டுச் சென்ற பாடம், ஒற்றுமையின் அவசியம், இறையச்சம் மிக்க வாழ்வுக்கு ரமழான் அமைத்துத் தந்த வழிமுறை போன்ற விடயங்களை அழகிய முறையில் விளக்கிக் காட்டினார். 

அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார். 
நபி(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளியில் தொழாமல்) திடலுக்குச் செல்பவர்களாக இருந்தனர். அவர்கள் முதன் முதலில் தொழுகையையே துவக்குவார்கள். தொழுது முடித்து எழுந்து மக்களை முன்னோக்குவார்கள். மக்களெல்லாம் தங்கள் வரிசைகளில் அப்படியே அமர்ந்திருப்பார்கள். அவர்களுக்குப் போதனைகள் செய்வார்கள். (வலியுறுத்த வேண்டியதை) வலியுறுத்துவார்கள்; (கட்டளையிடவேண்டியதை) கட்டளையிடுவார்கள். ஏதேனும் ஒரு பகுதிக்குப் படைகளை அனுப்ப வேண்டியிருந்தால் அனுப்புவார்கள். எதைப் பற்றியேனும் உத்தரவிட வேண்டியருந்தால் உத்தரவிடுவார்கள். பின்னர் (இல்லம்) திரும்புவார்கள். (புகாரி-956).
Disqus Comments