அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் வரி அதிகரிப்பினால் சிகரெட் ஒன்றின் விலை 11 ரூபா அதிகரிக்கப்படும் என சுகாதார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதன்படி ஒரு சிகரெட்டிற்கு, வற் வரி 15 வீதமும் மேலும் 5 ரூபாவும் அறவிடப்படவுள்ளது.
தற்பொழுது சந்தையில் 35 ரூபாவாக காணப்படும் ஒரு சிகரெட்டின் விலை 46 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.
அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவுள்ள புகையிலை வரி இந்த விலை அதிகரிப்புடன் நேரடியாக தொடர்புபடுவதாக குறிப்பிடப்படுகின்றது. இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் தகவல் வட்டாரங்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன. (மு)