Saturday, September 24, 2016

உள்ளூராட்சி தேர்தல் இந்த ஆண்டில் நடைபெறாது



உள்ளூராட்சி தேர்தலை இந்த ஆண்டு நடத்துவதற்கு முடியாதென்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 


எல்லை நிர்ணய நடவடிக்கைகள் முடிவடைந்திருந்தாலும், அதை வர்த்தமானியில் வெளியிடப்படுவது போன்ற பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டி இருப்பதாக ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய கூறினார். 



இதற்கிடையில் 2016ம் ஆண்டிற்கான வாக்காளர் இடாப்பில் தமது பெயர்கள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றதா என்பதை அறிந்து கொள்வதற்கான காலம் இம்மாதம் 28ம் திகதியுடன் நிறைவடைவதாக பெபரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி கூறியுள்ளார். 



(அத தெரண தமிழ்)
Disqus Comments