Tuesday, September 27, 2016

கொழும்பு குப்பை கூளத்தை புத்தளத்தில் கொட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து மாபெரும் கண்டன ஆா்ப்பாட்டம்.

(முஹ்சி ஆசிரியா்) புத்தளம் இளைஞர் சமூகம் எதிர்க்கப் புறப்பட்டு விட்டது.! நாமும் இணைந்து கொள்வோம்.!!

கொழும்பு குப்பை கூளத்தைப் புத்தளத்தில் கொட்டும் திட்டத்தை எதிர்த்து மாபெரும் ஆர்ப்பாட்டம் விரைவில் நடத்தப்படவுள்ளது.

பெரிய பள்ளி, பகா பள்ளி கங்காணிக்குளம் பள்ளிகளில் இருந்து புத்தளம் நகரில் அமைந்துள்ள மினாராவை நோக்கி மக்கள் தமது எதிர்ப்பை தெரிவித்த வண்ணம் பேரணியாக நடந்து வருவதற்காக ஏற்பாடுகள் செயப்பட்டுள்ளன.
இதில் புத்தளத்தில் இருக்கின்ற அனைத்து இன, மத மக்களும் இணைந்து கொள்ளுமாறு அன்புடன் அழைப்பு விடுக்கிறார்கள் "புத்தளத்தை நேசிக்கும் துடிப்புள்ள இளைஞர்கள்"
ஜும்மா தொழுகை முடிந்ததும் மேலே குறிப்பிடப்பட்ட பள்ளிக்கு வெளியே எதிர்ப்பு பதாதைகளை இளைஞர்கள் மக்களுக்கு விநியோகிக்க காத்திருப்பர்.
இந்த எதிர்ப்பு பேரணியில் சமூக, அரசியல் தலைமைகள் கலந்து கொள்வர்.
இது முழுமையாக இளைஞர்களால் முன்னெடுக்கப்படும் எதிர்ப்பு பேரணியாகும், எந்த அரசியல், சமூக, சமய தலைமைகளும் தலைமை தாங்கவில்லை என தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
Disqus Comments