(றிஸ்வி தௌபீக்) வடமேல் மாகாண கல்வி அமைச்சின் ஆலோசனைக்கூட்டம் நேற்று(27-12-216) அமைச்சர் சந்தியா குமார ராஜபக்ஷ தலைமையில் கூடிய போது வடமேல் மாகாணசபையின் ஶ்ரீலங்கா மு.கா. கௌரவ உறுப்பினர் எஸ்.எச்.சம் நியாஸ் அவர்களினால் முன்மொழியப்பட்ட யோசனைகள் அங்கிகரிக்கப்பட்டன.
சிலாபம் கல்வி வலயத்திற்குட்பட்ட பிரதேச தமிழ்மொழி மூல பாடசாலையான கொட்டாரமுள்ளை அல் ஹிராமுஸ்லிம் வித்தியாலயத்தின் உயர்வகுப்பு மாணவர் நலன்கருதி விஞ்ஞான பிரிவைஆரம்பிப்பதற்கான அனுமதி வளங்கப்பட்டது. புதிதாக பாடசாலைகல் ஆரம்பிப்பதாக இருப்பின் இரண்டு ஏக்கருக்கு குறையாத நிலப்பரப்பைக்கொண்ட விளையாட்டு மைதானம் அமையப்பெறல் வேண்டும், கடற்கரை, குளங்கள், ஏறிகளுக்கு அருகில் குப்பை கொட்டும் இடங்களுக்கு அண்மையில், 20'40' பேச்காணிகளில் அமைக்க அனுமதியளிப்பதில்லையன போன்ற தீர்மானம் தீர்மானிக்கப்பட்டது.
புத்தளம் பிரதேசத்தின் கல்விமேம்பாட்டுக்காக மாகாண சபை உறுப்பினர் நியாஸின் சேவைகளும், முன்னெடுப்புக்குளும் பாராட்டத்தக்கவை. புத்தளம் தேர்தல் தொகுதிக்கு வெளியில் வாழும் தமிழ்கற்கும் மாணவர் நலன்கருதி ஆனமடுவ மதவாக்குளம் முஸ்லிம் வித்தியாலயத்திலும் கா.பொ.ச. உயர்வகுப்பு வர்த்தகப்பிரிவை ஆரம்பிக்குமாறும் எழுத்து மூலம்கோரிக்கைவைத்து அனுமதிபெறப்பட்டது. கல்பிட்டி அல்அக்ஷா தேசிய பாடசாலையிலும் மீண்டும் ஆரம்பப்பிரிவை பெற்றுக்கொடுத்ததினால் ஏழைமக்களினதும், மாணவர்களினதும் சிறமத்தைதடுத்ததினால் மக்களின் பாராட்டையும், நன்மதிப்பையும் பெற்றுள்ளார்.
