Saturday, January 14, 2017

மறு சீரமைக்கப்பட்ட கொழும்பு 12. ஏ.ஈ.குணசிங்க வித்தியாலய திறப்பு விழா - 16ம் திகதி!

கொழும்பு 12. குணசிங்கபுரவில் அமைந்துள்ள ஏ.ஈ. குணசிங்க வித்தியாலயம் சுமார் 10 மில்லியன் ரூபாய்கள் செலவில் மறுசீரமைக்கப்பட்டு எதிர்வரும் 16ம் திகதி திங்கள் கிழமை திறக்கப்படவுள்ளது. 


மத்திய கொழும்பில் சிங்கள மொழியில் கற்க விரும்பும் மாணவர்களின் நலன்கருதி  கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் றஹ்மான் அவர்களின் 'மறுமலர்ச்சி பெறும் மத்திய கொழும்பு' என்ற கருத்திட்டத்தின் அடிப்படையில்  முன்வைக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க சகல வசதிகளுடன்  முற்றிலும் மறு சீரமைக்கப்பட்டுள்ள இந்த பாடசாலைக்கான நிதியுதவியை  அல்கபாலா நிறுவனம் வழங்கியிருந்தது.



இந்த திறப்பு விழா நிகழ்வில் பிரதம அதிதியாக மேல் மாகாண கல்வியமைச்சர் ரஞ்சித் சோமவன்ச கலந்துகொள்ளவுள்ளார். கௌரவ அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் றஹ்மான், மேல்மாகாண சபை அங்கத்தவர்கள் அர்ஷhத் நிஸாம்தீன், ஏ.ஜே.எம். பாயிஸ், கொழும்பு வலய கல்விப்பணிப்பாளர் ஜயன்த விக்ரமநாயக்க, சட்டத்தரணி யூ.ஏ. நஜீம் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.


மத்திய கொழும்பில், தமது பிள்ளைகளுக்கு சிங்கள மொழி மூலம் கற்பிப்பதற்கு விரும்பும் பெற்றோர்கள் பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர். இவ்வருடம் சிங்கள மொழியில் கற்பதற்கு விண்ணப்பித்த நூற்றுக்கணக்கான பிள்ளைகள் பாடசாலைகளால் நிராகரிக்கப்பட்டுள்ளனர். 

2017ம் ஆண்டில் சிங்கள மொழியில் தரம் 01ல் சேர்ந்து கற்பதற்கு பாடசாலை கிடைக்காத மாணவர்கள் கொழும்பு வலய கல்விக் காரியாலயம் ஊடாக ஏ.ஈ. குணசிங்க வித்தியாலயத்திற்கு அனுமதி வழங்கப்படுகின்றது.
Disqus Comments