Monday, January 30, 2017

திருகோணமலையில் கடலில் இரு இளைஞர்கள் மாயம்!

திருகோணமலை அலஸ்தோட்டம் பகுதியிலுள்ள சோலையடி கடற்கரையில் குளிக்கச்சென்ற இரண்டு இளைஞர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
செல்வநாயகபுரம் பாடசாலைக்கு அருகிலுள்ள நண்பர்கள் ஆறு பேர், கடலில் குளிப்பதற்காகச் சென்றபோது மூவர் நீரில் அடித்துச்செல்லப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஒருவர் காப்பற்றப்பட்டபோதிலும் இருவர் காணாமல் போயுள்ளனர்.
திருகோணமலை செல்வநாயகபுரம் பாடசாலைக்கு அருகில் வசித்து வரும் பீ.கேசவன் பிரசாத் (வயது – 24) மற்றும் துரைராசா கிரிஷாந்தன் (வயது – 28) ஆகிய இருவருமே நீரில் மூழ்கியுள்ளனர்.
இவர்களின் உடல்களை தேடும் நடவடிக்கையில் மீனவர்களுடன் உப்புவெளி பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
Disqus Comments