(பாறுக் ஷிஹான்) யாழ்ப்பாணம் மாநகர சபைக்குச் சொந்தமான இறைச்சிக்கடைகள் உரிய பராமரிப்பு இன்றி காணப்படுவதனால் கடைகளை பெற்றுக் கொண்ட உரிமையாளர்கள் பெரும் சிரமங்களை எதிர் கொள்வதாக சுட்டிக்காட்டுகின்றனர்.
வருடாவருடம் குத்தகை அடிப்படையில் யாழ் மாநகரசபை தனது எல்லைக்குட்பட்ட ஆட்டிறைச்சி மாட்டிறைச்சி கடைகளை வர்த்தகர்களுக்கு வழங்கி வருகின்றன.
இருந்தபோதிலும் மேற்படி கடைகள் திருத்தப்படாமலும் புனர்நிர்மாணம் செய்யப்படாத நிலையிலும் உள்ளன.
ஒருசில கடைகளுக்கு முறையான கதவுகல்கூட இல்லாமலும் கடைகளுக்கு உட்புறமும் வெளிப்பகுதிகளும் குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றன இதன் காரணத்தினால் வர்த்தகர்களும் வாடிக்கையாளர்களும் நாளாந்தம் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.
இவ்வாறான இறைச்சிக் கடைகளை நம்பி கிட்டத்தட்ட யாழ் முஸ்லீம்கள் தமது ஜீவனோபாயத்தை முன்னெடுத்து செல்கின்றனர்.இவ்வாறான இறைச்சிக்கடைகளை நம்பி சுமார் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.அத்துடன் 30க்கு மேற்பட்ட கடைகள் இவ்வாறான நிலைமைகளிலே உள்ளன.
அத்துடன் முஸ்லீம்களின் இறைச்சி கடைகள் மாத்திரம் பரிசோதனை என்ற பெயரில் சுகாதாரப் பரிசோதகர்கள் அண்மையில்(8) நடாத்தி அதிகளவான மனித பாவனைக்கு உதவாத இறைச்சிகள் மீட்கப்பட்டதாக கூறினர்.
ஆனால் இறைச்சி உரிமையாளர்கள் இவ்வாறான சோதனை நடவடிக்கை சுகாதார பரிசோதகர்கள் தாங்கள் வருடாந்த இடமாற்றம் தொடர்பாக மேற்கொண்டு வந்திருந்த போராட்டத்தை திசை திருப்பவே இறைச்சிக்கடைகளை பரிசோதனை மேற்கொண்டதாக குறிப்பிடுகின்றனர்.
மேலும் குறித்த இப்பரிசோதனைகளை காண்பிப்பதற்காக சுகாதார பரிசோதகர்களினால் அவ்விடத்திற்கு செய்தி சேகரிக்க அழைத்து செல்லப்பட்ட செய்தியாளர்களை மாடு வெட்டும் கத்தி கொண்டு அச்சுறுத்தியதாக இறைச்சிக் கடை உரிமையாளர்கள் மீது குற்றச்சாட்டு ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
எனினும் இவ்விடயம் தொடர்பில் எந்த ஒரு ஊடக நிறுவனமோ ஊடகவியலாளர்களோ இறைச்சிக்கடை உரிமையாளர்களிற்கு எதிராக பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு எதனையும் செய்யவில்லை என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
மேலும் யாழ் மாநகர சபை எல்லைக்குள் உள்ள 43 இறைச்சி கடைகளில் 30 இறைச்சிக்கடையினை அப்பகுதியில் செல்வாக்கு உள்ள ஒருவரே ஏலத்தில் எடுத்துள்ளதாகவும் ஆனால் ஒருவர் மூன்று கடையின் மேல் நடாத்த முடியாது என்பதனால் தனது உறவுகள் மற்றும் அறிந்தவர் தெரிந்தவர் மூலம் குறித்த நபர் பெற்றுள்ளதாக பாதிக்கப்பட்ட முன்னர் மாநகர சபை எல்லைக் குட்பட்ட பகுதிகளில் இறைச்சிக்கடை நடாத்திய மற்றுமொரு முன்னாள் இறைச்சிக்கடை உரிமையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இருப்பினும் குறித்த அந்நபர் அதிக கேள்வி கோரல் பதிவு செய்தமையினால் மாநகர சபையின் அனுமதியுடன் அவரின் பிடியில் தற்போது 30 கடைகள் உள்ளன.பெரும்பாலானவை நடாத்தப்படாமல் மூடி வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறாக செயற்பாட்டினால் பாதிக்கபட்ட மற்றைய முன்னாள் இறைச்சிக்கடை உரிமையாளர்கள் பழிவாங்கம் மகமாக நல்லூர் பிரதேச சபை மற்றும் சாவகச்சேரி நகர சபை பகுதியில் இறைச்சிக் கடைகளை பெற்று மிக குறைந்த விலைகளில் இறைச்சிகளை விற்பனை செய்வதாக தெரிவிக்கப்படுகி;றது.
இதனால் யாழ் மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் அப்பகுதிகளுக்கு சென்று இறைச்சிகளை கொள்வனவு செய்வதாக தெரிவிக்கப்படுகிறது.