Sunday, January 8, 2017

நல்லாட்சியின் இருவருட பூர்த்தி கிழக்கில்- திருகோணமலையில் சர்வமத நிகழ்வுகள்

நல்லாட்சி அரசின் 02வருடப் பூர்த்தியினை சிறப்பித்து கிழக்கு மாகாணத்தில் பல பாகங்களிலும் நிகழ்வுகள் நடந்தேறின. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்காரியாலத்தில் முதலமைச்சரின் பங்குபற்றுதலுடன் சிறப்புரையாற்றலும், மரநடுகையும் இடம்பெற்றன.

அதனைத் தொடர்ந்து திருகோணமலையில் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தலைமையில் சர்வமத நிகழ்வுகள் இடம்பெற்றன. திருகோணமலை சோனஹர்வாடிப் பகுதி ஜும் ஆ பள்ளிவாயலில் இடம்பெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுணர் ஒஸ்ரின் பெர்ணாண்டோ, பிரதம செயலாளர் சரத் அபேயவர்த்தன மற்றும் அதிகாரிகள் பொதுமக்கள் உலமாக்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.







Disqus Comments