(சாய்ந்தமருது முஹம்மட் றின்ஸாத்) நாட்டில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக டெங்கு நுளம்பின் பெருக்கம் அனைத்து இடங்களிலும் காணப்படுகிறது.
அந்த வகையில் கல்முனை மற்றும் சாய்ந்தமருது பகுதியும் விதிவிளக்கல்ல
கடந்த இரண்டு மாதங்களாக கல்முனை சாய்ந்தமருது பகுதியில் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நிலையில் அதிகமான நோயாளர்கள் அப்பிரதேச வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் கிடைக்கின்ற அதே வேளை கடந்த மாதம் 14 ஆம் திகதி சாய்ந்தமருது பகுதியைச் சேர்ந்த 11 வயதான சிறுவன், டெங்குக் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதேபோன்று இன்னுமொரு அழிக்க முடியாத துயராக 12 மாதம் 29 ம் திகதி கல்முனை குடி 16 ஐச் சேர்ந்த அகமது அதீப் என்ற 5 வயது சிறுவனின் உயிரை டெங்குக் காய்ச்சல் பறித்துள்ளது.
இந்த டெங்கு தொடராக இப்பிரதேச மக்களின் உயிர்களை ஏன் காவுகொள்கிறது இன்னும் எத்தனை உயிர்கள் இந்த கொடிய டெங்கு பரிக்கப் போகிறது இதற்குள் ஒளிந்திருக்கும் மர்மம் தான் என்ன இந்த டெங்கு நோயினை எவ்வாறு எமது சமுகத்தினை விட்டு துரத்தி அடிப்பது இந்த விடையம் தொடர்பாக சற்று ஆராய்ந்து பார்க்கின்ற வேளை சிலர் விடுகின்ற பாரிய தவருகளே இதர்க்கு காரணம் என எமக்கு வெளிப்படையாக தோன்றுகின்றது.
யார் விடுகிற தவரு தெரியுமா அது தான் ஆச்சரியமானது பொது மக்கள் தான் இதர்க்க 90 வீதம் காரணம் ஏன் என்று சொன்னால் இந்த இரண்டு பிரதேசத்தினை பொருத்தவரையில் இந்த டெங்கு நாேய் தொடர்பான பல விளிப்பூட்டல் நிகழ்வுகள் மற்றும் டெ ங்கு பரவக்கூடிய இடங்களை இல்லாதொளித்தல் போன்ற பல செயற்பாடுகளை ஒவ்வொரு வீடாச் சென்று தங்களது சேவைகளை செய்து வருகிறார்கள் கல்முனை மாநகர சபையினர் மற்றும் கல்முனை சுகாதார பிரிவினர் இன்னும் பல சமுக நலன் கொண்ட அமைப்பினர்
ஆனாலும் இந்த டெங்கு நோய் பரவுகின்றது என்றால் காரணம் மக்கள் விடும் பாரிய தவருகள் தான்
பொது மக்களாகிய நீங்கள் ஒரு இடத்தில் குப்பைகள் கிடக்கிறது என்றால் அதனை மாநகர சபை ஊளியர்கள் துப்பரவு செய்தால் அதனை சரியான முறையில் பராமரிப்பது உங்களின் கடமை அதை விட்டு விட்டு அவர்கள் குப்பைகளை அல்லுவது பொதுமக்களாகிய நீங்கள் மீண்டும் அந்த இடத்தில் குப்பைகளை போடுவது இவ்வாறு நாம் தொடர்ச்சியாக செய்து வருகிறோம் இதனால் தான் அந்த இடத்தில் டெங்கு நுளம்புகள் அதிகளவில் விளைகிறது.
இதர்க்க யார் காரணம் சற்று சிந்தியுங்கள் மக்களே
அடுத்த விடையத்தினை பாருங்கள் எமது வீட்டில் எத்தனையோ டெங்கு நுளம்புகள் பரவக்கூடிய இடங்கள் இருக்கின்றன உதாரணமாக
- அகற்றப்படும் இலகுவில் உக்காத பொருட்கள்
- அகற்றப்படும் உக்கும் பொருட்கள்
- மழைநீர் தேங்கி நிற்கக்கூடிய இடங்கள், தடைப்பட்டுள்ள கூரைப் பீலிகள் மற்றும் கொங்கிரீட் கூரைகள்
- மறைக்கப்படாத நீரைச் சேகரித்து வைக்கும் பாத்திரங்கள் மற்றும் நீர்த்தொட்டிகள்
- நீர் ஒன்றுசேரக்கூடிய வீட்டு அலங்கரிப்புக்குப் பயன்படுத்தும் பல்வேறு பொருட்கள் மற்றும் அலங்கார பாத்திரங்கள்
- விசேடமான வீட்டு உபகரணங்கள்: குளிர்சாதனம் மற்றும் குளிரூட்டி தட்டுக்கள்
- மிருகங்கள் பருகுவதற்காக வைக்கப்பட்டுள்ள சிறிய பாத்திரங்கள், எறும்பு பொறி
- செடிகள், செடிகளின் பகுதிகள் மற்றும் மரப் பொந்துகள்
போன்ற இடங்களை நாம் அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும் இதை யாரும் சொல்லி செய்ய வேண்டிய நிலமையில் நாம் இருக்கக் கூடாது அதனை நாம் சுத்தம் செய்யாது வைத்திருந்தால் அதர்க்குள் டெங்கு நுளம்புகள் விளைந்து எமது பிள்ளைகள் அல்லது எமது உறவினர்களைத் தான் தாக்கப் போகிறது அதனால் எமக்குத்தான் உயிர் இழப்புகள் ஏற்படப் போகிறது
ஆகவே எமது உறவுகளே இரண்டு உயிர்களை இழந்து விட்டாேம் இன்னும் உயிர்களை இழப்பதர்க்க முன்னர் நாம் விழித்துக் காெள்ள வேண்டும் டெங்கு பரவக்கூடிய இடத்தினை முற்றாக அழித்து எம்மையும் எமது சமுகத்தினையும் பாதுகாப்போம்.