Saturday, January 7, 2017

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகின - கைத்தொலைபேசியில் பெற.......

2016 ஆம் வருட கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று வெளியாகியுள்ளன. 


குறித்த பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற பரீட்சைத் திணைக்களத்தின் இணைய முகவரியில் பார்வையிட முடியும். 



இதேவேளை, அனைத்து டயலொக் வாடிக்கையாளர்களும் கையடக்க தொலைபேசி மூலம் தமது பெறுபேறுகளை அறிந்து கொள்ள முடியும். 



EXAMS இடைவெளி intex number டைப் செய்து கீழ்வரும்  இலக்கங்களுக்கு அனுப்பி வைக்கவும். 
Dialog-7777 
Mobitel-8884 
Airtel-7545 
Etisalat-3926 
Hutch-8888



பெறுபேறுகளை முறையாக பெற்றுக்கொள்வதற்கு குறிப்பிடப்பட்ட இடத்தில் சரியாக சுட்டெண்ணை உள்ளடக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 



சுட்டெண்ணை பிழையாக உள்ளடக்கினால் சரியான பெறுபேற்று தகவல்களை பெற்றுக்கொள்ள முடியாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 



இது தொடர்பாக மேலதிக தகவல்கள் அவசியமாக இருப்பினர் 1911 என்ற துரித இலக்கத்தை தொடர்பு கொள்ளவும். 



2016 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை கடந்த ஆகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி தொடக்கம் 27 ஆம் திகதிவரை நடைபெற்றது. 



பரீட்சையில் மொத்தமாக 3 லட்சத்து 15 ஆயிரம் பேர் வரை தோற்றியிருந்தனர். 
Disqus Comments