Sunday, January 15, 2017

வருந்துகின்றோம். சவூதியின் பொதுமன்னிப்பு செய்தி உத்தியோக பூர்மானதல்ல!

இன்று 15-01-2017 முதல்  12-04-2017 முதல் சட்ட விரோதமாக தங்யிருக்கும் வெளியாட்டவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படுகின்றது என்று செய்தி சவூதி அரேபியாவின் உள்ளூர் ஊடகங்கள் வெளியாகி பின்னர் இணையம், சமூக வலைதளம் ஊடக் நேற்று முதல் பரவிக்கொண்டிருக்கின்றது. 

அந்த செய்தியை நாமும் இன்று காலை பகிர்ந்து இருந்தோம் என்றாலும், மேற்படி செய்தியை சவூதி அரசாங்கம்  நிராகரித்துள்ளது. அதாவது அந்த செய்தி உத்தியோக பூர்வமானதல்ல என்தாகவும், சட்ட விரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் தொடா்பான சில நடவடிக்கைகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 13ம் திகதி முதல் தான் ஆரம்பமாகும் என்பதாக அறிவித்துள்ளது. எனவே அந்த தகவலுக்கான எமது வருத்தத்தை தெரிவித்துக் கொள்ளகின்றோம்.

Disqus Comments