Saturday, January 14, 2017

முச்சக்கரவண்டி சாரதிகளின் கவனத்திற்கு ! : பயணச்சீட்டு வழங்குவது அவசியம் - புதிய சட்டம் வருகிறது

சகலபயணிகள் முச்சக்கரவண்டிகளுக்கும் கட்டாயமாக மீற்றர் பொருத்துவதற்கான புதியசட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கும் பயணிகளின் பயணத்தூரத்துக்கு அமைவாக பயணச்சீட்டை வழங்குவதற்குமான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.
முச்சக்கரவண்டியில் பயணிக்கும் பயணிகள் கடந்தகாலங்களில்  எதிர்நோக்கிய அசெளகரியங்களை கருத்திற்கொண்டு இந்த புதிய அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 
முச்சக்கரவண்டி தொடர்பாக புதிய விதிமுறைகளை உள்ளடக்கி வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலின்படி பயணிகள் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் அனைத்து முச்சக்கரவண்டிகளிலும் மீற்றர் பொருத்தப்பட்டிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அனைத்துமுச்சக்கரவண்டிகளிலும் சாரதி ஆசனத்திற்கு பின்புறமாக வாகனத்தின் பதிவிலக்கம், சாரதியின் பெயர், சாரதியின் புகைப்படம் என்பன காட்சிப்படுத்தப்படவேண்டும் என்றும் பயணிகள் போக்குவரத்தின் போது குறுகிய வீதிகளினூடாக பயணிப்பதற்கு சாரதி கடமைப்பட்டுள்ளார் என வர்த்தமானியில் கூறப்பட்டுள்ளது. 
குறித்த வர்த்தமானி அறிவித்தலானது போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சரின் கையொப்பத்துடன் மோட்டார் வாகனப் போக்குவரத்துசட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ளது. 
2017 ஜனவரி 09 ஆம் திகதிவெளியிடப்பட்டுள்ள 2001/2 என்ற இலக்கத்தினுடைய விஷேட வர்த்தமானிஅறிவித்தலின்படி பயணிகள் பயணத்தினை நிறைவுசெய்து கட்டணம் செலுத்தப்பட்டதன் பின்னர் அதற்கான பற்றுச்சீட்டு வழங்கப்படுவதும் சாரதிகளுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 
இவை தவிர பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் அனைத்து முச்சக்கரவண்டிகள் தொடர்பிலும் மேலும் பல விதிமுறைகளை உள்ளடக்கியதாக இந்தவர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Disqus Comments