இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2 வது இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி 2 விக்கட்டுகளால் வெற்றிபெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை அவுஸ்திரேலிய அணிக்கு வழங்கியது.
இதன்படி அந்த அணி 20 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுகளையும் இழந்து 173 ஓட்டங்களை பெற்றது.
துடுப்பாட்டத்தில் மைக்கல் கிரிங்கர் 43 ஓட்டங்களையும், மொய்சஸ் ஹென்ரிக்ஸ் 56 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் நுவன் குலசேகர 31 ஓட்டங்களை கொடுத்து 4 விக்கட்டுகளை கைப்பற்றினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 8 விக்கட்டுகளை இழந்து 176 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது.
துடுப்பாட்டத்தில் அசேல குணரத்ன 84 ஓட்டங்களை பெற்றார்.
