மொனராகலையில் 2 வயது குழந்தைக்கு மதுபானத்தை பருகக்கொடுத்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபர் 33 வயதுடையவர் என பொலிஸாரின் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவம், மொனராகலை பஹலகம ஒக்கம்பிட்டிய பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதில் பாதிப்புக்குள்ளான இரண்டு வயதுடைய குழந்தை மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்ட நபரை வெல்லவாய நீதிமன்றில் ஆஜர்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
