அரசு வழங்கவுள்ள வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொள்ள இளைஞர்கள் மற்றும் யுவதிகள் ஆயத்தமாக வேண்டும் எனநிதி அமைச்சர் ரவி கருனாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்குளி பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து வெளியிட்ட அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர் ..
நல்லாட்சி அரசாங்கம் முன்னெடுத்துள்ள புதிய வேலைதிட்டங்கள் ஊடாக எதிர்வரும் 6 மாதங்களுக்கு பின்னர் 5 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் அதனை பெற்றுக்கொள்ள இளைஞர் மற்றும் யுவதிகள் ஆயத்தமாக வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
(MN)