Thursday, February 23, 2017

பூமியை போன்று புதிதாக 7 கோள்கள்: நாசா அதிரடி அறிவிப்பு! (வீடியோ இணைப்பு)

விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா புதிதாக 7 கோள்களை கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளது. அதில் 3 கோள்கள் வசிப்பதற்கு ஏற்ற இடம் எனவும் தெரிவித்துள்ளது.

 இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் நாசா விஞ்ஞானிகள் வெளியிட்ட தகவல், புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள 7 கோள்களில் 3ல் வசிப்பதற்கு ஏற்ற வகையில் உள்ளது. 3 கோள்களில் நீர் ஆதாரம் இருப்பதாகவும் நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

 பூமியில் இருந்து 40 ஒளி ஆண்டு தொலைவில் இந்த கோள்கள் உள்ளன. ஸ்பிட்செர் மூலம் இந்த புதிய கோள்களை கண்டுபிடித்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. முன்னதாக விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா இன்று ஒரு முக்கியமான தகவலை வெளியிடப்போவதாக அறிவித்திருந்தது. 

அதன்படி செய்தியளார்கள் சந்திப்புக்கு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது #askNASA என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி பொதுமக்களும் கூட நாசா விஞ்ஞானிகளிடம் கேள்வி கேட்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. நாசா ஒளிபரப்பில் இந்த நேரலையை உலகெங்கிலும் இருந்து 6 கோடி பேருக்கும் அதிகமானோர் பார்த்தது குறிப்பிடத்தக்கது. நாசாவின் இந்த அறிவிப்பு வின்வெளி ஆய்வில் புதிய மைல் கல்லாக கருதப்படுகிறது. - 

Disqus Comments