Sunday, February 5, 2017

கிழக்கில் காணி மற்றும் வீடற்றவர்களின் பிரச்சினையைத் தீர்க்க முதலமைச்சர் நடவடிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்தில் காணி மற்றும் வீடுகள் இல்லாத பிரச்சினை பாரியளவில்  காணப்படும் நிலையில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டினால் அதனை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு கட்டமாகாவே ஜனாதிபதியின் ஏறாவூர் விஜயத்தில்  ஆயிரத்து  762 பேருக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டதுடன் இதில்  சிங்களம் முஸ்லிம் மற்றும் தமிழ் என மூவின மக்களுக்கு வழங்கப்பட்டமை விசேட அம்சமாகும்,

மேலும் வீடுகள் இன்றி பல ஆண்டு காலமாக சிரமங்களை எதிர்நோக்கி வந்த 962 பேருக்கான புதிய வீடுகளும் இதன்  போது வீடற்றவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.



மட்டக்களப்பு மாவட்டம் வறட்சியினால் அடிக்கடி பாதிக்கப்பட்டுவரும் நிலையில்  10 ஆயிரம் பேருக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டினால் இதன் போது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது





Disqus Comments