எரித்திரியா நாட்டு அரசாங்கம் வித்தியாசமான சட்டம் ஒன்றை அமுல்படுத்தியுள்ளது.
நாட்டிலுள்ள ஆண்கள் இரண்டு திருமணம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யத் தவறும் பட்சத்தில் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என அரசாங்கம் எச்சரித்துள்ளது.
எரித்தியாவின் சனத்தொகையில் ஆண்களை விட பெண்களே அதிகளவில் உள்ளனர். இதனை நிவர்த்தி செய்யும் வகையிலேயே புதிய சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
எத்திரியாவின் மொத்த சனத்தொகை 4 மில்லியன் என புள்ளவிபரங்கள் தெரிவிக்கின்றன.
1998 - 2000ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற யுத்தத்தில் 1500000 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதனையடுத்து எரித்திரியா அரசாங்கம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.
ஆண்கள் இரண்டாவது திருமணம் செய்து கொள்வதற்கு தேவையான அனைத்து விதமான உதவிகளையும் அந்நாட்டு அரசாங்கம் செய்து கொடுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
