Tuesday, February 21, 2017

விஷேட விமானம் மூலம் நள்ளிரவில் இலங்கையில் தரையிறங்கிய அமெரிக்க அதிகாரிகள்!

அமெரிக்க அரசாங்கத்தின் விசேட பிரதிநிதிகள் சிலர் நேற்று இரவு இலங்கைக்கு வருகைத் தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று இரவு 11.30 மணியளவில் அமெரிக்காவின் விசேட விமானம் ஒன்றின் மூலம் அவர்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
16 பேரை கொண்ட இந்த பிரதிநிதிகள் குழுவுக்கு பீட்டர் ரொஸ்கென் என்பவர் தலைமை தாங்குவதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்த பிரதிநிதிகள் குழு எதிர்வரும் 24ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார்கள் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கு இடையில் விசேட ஒப்பந்தங்கள் சிலவற்றிற்கு கையொப்பமிடுவதற்காக இவர்கள் இலங்கைக்கு வருகைத்தந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
Disqus Comments