Tuesday, February 7, 2017

பிரசவத்திற்காக பேராதனை வைத்தியசாலைக்கு சென்ற சகோதரிக்கு அதிர்ச்சி அனுபவம்!

சைடம் தனியார் மருத்தவ கல்லூரிக்கு ஆதரவாக நீதிமன்ற தீர்ப்பு வெளிவந்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் எனது அனுபவத்தை பகிர்ந்துகொள்ளவது சிறந்தது என நினைத்தவளாக எனது சொந்த அனுபவத்தை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.

(-ஹஷானா பர்வீன்-) எனக்கு திருமணமாகி மூன்று பிள்ளைகள் உள்ளன. அண்மையில் எனது  மூன்றாவது பிரசவத்திற்காகப் பேராதனை அரச வைத்தியசாலையில் அனுமதிக்கட்டேன்.

எனக்கு ஏற்கனவே பிறந்த இரு ஆண் குழந்தைகளும் சிசேரியன் முறையில் பிறந்ததால் மூன்றாவதும் சிஷேரியன் தான் என  ஏற்கனவே மருத்துவர்களால் தீர்மாணிக்கப்பட்டிருந்தது.

பிறக்க இருக்கும் மூன்றாவது பெண் குழந்தை என எற்கனவே ஸ்கேனிங் மூலம் நாம் அறிந்துகொண்டதால் மிக்க மகிழ்ச்சியுடன் புது வரவுக்காக காத்திருந்தோம்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மூன்று நாட்களுக்கு பின்னர் என்னை ஒபரேஷனுக்கு எடுத்திருந்தார்கள். 

முன்னர் பிறந்த இரண்டு குழந்தைகளும் சிஷேரியன் என்பதால் கொஞ்சம் மனதைரியத்துடன் சென்ற எனக்கு அங்கு பல அதிர்ச்சிகள் காத்திருந்தன.

எனது இடுப்பு பகுதியில் ஊசியேற்றிய வைத்தியர்கள் சிறிது நேரத்தில் எனது வயிற்றை கிழித்து குழந்தையை எடுக்க முயற்சி செய்தார்கள். அப்போது ரத்தப்போக்கு அதிகமாக அம்மருத்துவர்கள் இது பிலண்டா பிரீவியா கேஸாகா இருக்குமோ என கதைத்துகொண்டார்கள்.

அதனை கேட்டுக்கொண்டிருந்த நான் ஏற்கனவே எனக்கு இரு குழந்தைகளும் பிலசண்டா பிரிவியா என்றும் எனது மருத்துவ குறிப்பில் அது தொடர்பில் உள்ளது என கூறினேன். உடனடியாக எனது
மருத்துவக்குறிப்பை பார்த்து மேலதிக விபரங்களை வாசித்தார்கள்.

அவர்கள் (பயிற்சி)  புதிய வைத்தியர்கள் என்பதையும் பிலசண்டா பிரிவியா என்ற சிக்கலான கேசை அவர்கள் இன்றுதான் முதன்முதலில் எதிர்கொள்கிறார்கள் என்பதை  அவர்களின் பேச்சிலிருந்து நான் அறிந்துகொண்டேன்.

புத்தகத்தில் படித்த விடயத்தை முதல் தடவையாக நேரில் செய்ய அந்த மருத்துவர்கள் முயற்சித்த போது எனக்கு ரத்தப்போக்கு அதிகமாகிவிட்டது. ரத்தப்போக்கை கட்டுப்படுத்த போராடிய அவர்கள் கடைசியில் எனது கர்ப்பப்பையை அகற்றப்போவதாக என்னிடம் கூறினார்கள்.

இந்த விடயங்கள் தொடர்பில் நான் சில விபரங்களை அறிந்துவைத்திருந்ததால் ஏன் எனது கர்ப்பப்பையை அகற்றுகிறீர்கள் என கேட்டேன்.

ஏற்கனவே நான் ஆசிரியை என்ற விடயத்தையும் எனது கணவர் ஒரு அமைச்சரின் இணைப்பு செயலாளார் என்ற விடயத்தையும் அவர்கள் எனது சுயவிபரம் கோரிய போது கூறியிருந்ததாலோ தெரியவில்லை அவர்கள் அப்போது பயந்துபோனதை என்னால் அவதானிக்க முடிந்தது.

அப்போது அம்மருத்துவர்கள் உடனடியான வைத்தியசாலையின் விஷேட மருத்துவர்களை உதவிக்கு அழைக்க தொலைபேசியில் தொடர்ப்புகொண்டார்கள். ஆனால் அவர்கள் யாரும் அழைக்கும் தூரத்தில் இருக்கவில்லை. துரதிஸ்டவசமான விடயம் சில விஷேட வைத்தியர்கள் அந்த நேரத்தில் தனியார் மருத்துவமனைகளில் சேவையில் இருந்தார்கள்.

சுமார் ஒரு மணித்தியாளத்துக்கும் மேலாக எனது வயிற்றை பிளந்து வைத்துகொண்டு செய்வது அறியாது திகைத்துப்போய் இருந்த அந்த மருத்துவ பயிற்சி எடுக்கும் வைத்தியர்கள் கடைசி முயற்சியாக பேராதனை மருத்துவ கல்லூரி பேராசியரை தொடர்புகொண்டனர்.

அவர்கள் தொடர்புகொண்டு சிறிது நேரத்தின் பின்னர் அங்கு வந்த முதிய தோற்றமுடைய வைத்திய பேராசியர்  மருத்துவ பயிற்சி எடுக்கும் வைத்தியர்களுக்கு கடும் தொனியில் அறிவுரை வழங்கிய வண்ணம் எனக்கு சிகிற்சை வழங்க ஆரம்பித்தார்.

நடப்பவைகளை அரைமயக்கத்தில் அவதானித்துகொண்டிருந்த நான் பேராசியர்  கடுந்தொணியின் அறிவுரை வழங்கியதை கண்டு எனக்கு ஏதும் நடந்துவிட்டதோ என்ற அச்சத்தில் நான் உளர துவங்கிவிட்டேன் இதை அவதானித்த பேராசிரியர் கண்ணால் சைகை செய்ய எனக்கு ஏதோ ஒரு ஊசி ஏற்றப்பட்டது. பின்னர் நான் மருத்துவமனை வார்டில்தான் கண்விழித்தேன்.

குறித்த பேராசிரியர் தற்போது சத்திர சிகிற்சைகள் மேற்கொள்வத்தில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதாகவும் நிருவாக வேலைகளை மாத்திரம் பார்ப்பதாகவும் அவசர கேஸ் என்பதால் எனக்கு சத்திர சிகிற்ச்சை மேற்கொள்ள வந்துள்ளதாகவும் அவர் வைத்தியாலையில் இருந்தது எனது அதிஷ்டம் என்பதையும் பின்னர் அறிந்துகொண்டேன்.

மேலும் எனக்கு ஏற்பட்ட இந்த சிக்கல் அங்கிருந்த பிரதான வைத்தியர்களின் கவனயீனத்தால் நிகழ்ந்துள்ளது என்பதையும் பின்னர் அறிந்துகொண்டேன்.

குறித்த பேராசியரும் அந்த நேரத்தில்  இல்லாமல் இருந்திருந்தால் விடயம் வேறு விதமாக அமைந்திருக்கலாம்.

எனக்கு ஏற்பட்ட அனுபவம் அரச மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளை வைத்தியர்கள் ஒரு பொருட்டாகவே  கணக்கில் எடுப்பதில்லை என்பதற்கு ஒரு சான்றாகும்.

இன்று தனியார் மருத்துவ பல்கலைகழகத்துக்கு எதிராக போராடும் வைத்தியர்களின் சமுக அக்கறை தொடர்பிலும் அவர்கள் அரச மருத்துவமனைகளில் நோயாளிகளை நடாத்தும் விதம் பற்றியும் நான் தனியாக சொல்லத்தேவையில்லை.

வைத்திய கல்லூரி தனியார் மயப்படுத்தலுக்கு எதிராக குரல்கொடுக்கும் எமது நாட்டு வைத்தியர்கள் தனியார் மருத்துவமனைகளுக்கு எதிராகவோ  தனியார் மருத்துவமனைகளில் அதிகமான கட்டணம் வசூழிப்பது தொடர்பிலோ கோஷம் எழுப்புவதில்லை. அதேபோல் தனியார் மருத்துவமனைகளில் பனியாற்றும் போது காட்டும் தொழில் அக்கறையை அரசு மருத்துவமனைகளில் சேவை செய்யும்போது காட்டுவதில்லை.

இன்று வைத்திய மாணவர்களாக இருந்துகொண்டு தனியார் வைத்திய கல்லூரிகளுக்கு  எதிராக வீதியில் இறங்கி குரல்கொடுப்பவர்கள் எதிர்காலத்தில் தனியார் மருத்துவமனைகளில் சேவைபுரிவதற்கு முன்னுரிமை வழங்காமல் பொது மக்கள் நலன்களை முன்னிலைப்படுத்தி அரச வைத்திய சாலைகளில் சேவையாற்ற உறுதியெடுத்துகொள்ளுங்கள்(MN)
Disqus Comments