Tuesday, February 14, 2017

சசிகலாவின் முதலமைச்சர் கனவு தகர்ந்தது! சொத்துக் குவிப்பு வழக்கு 4 வருடங்கள் சிறை!

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலர் சசிகலாவின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பை இன்று உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது.

இதில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இவர்களுக்கு 4 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

இதில் நீதிபதிகள் பினாக்கி சந்திர கோஷ், அமிதவ ராய் என இரண்டு நீதிபதிகளுமே ஒரே தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

சசிகலா, இளவரசி, சுதாகரன் குற்றவாளிகள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதுடன், 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்துள்ளது.

ஜெயலலிதா மரணம் அடைந்ததால் அவரை வழக்கில் இருந்து உச்ச நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

இந்த வழக்கில் 1000 பக்க தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் சசிகலாவை உடனடியாக சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தீர்ப்பு வெளியாகும் நீதிமன்ற அறை எண் 6இல் பெரும் கூட்டம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து கர்நாடகா அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவுக்கே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
Disqus Comments