பாடசாலை மாணவர்கள் மத்தியில் கேரள கஞ்சாவை விற்பனை செய்த சர்வதேச பாடசாலை ஒன்றின் ஆசிரியர் ஒருவரும் கந்தானை பிரதேசவாசி ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட இருவரும் மாணவர்கள் மத்தியில் நீண்டநாட்களாக கேரள கஞ்சாவை விநியோகித்து வந்ததாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், விசேட அதிரடிப்படையினரால் அவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டனர். கைதுசெய்யப்பட்டபோது 920 கிராம் கேரள கஞ்சா அவர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது.
கேரள கஞ்சா அடங்கிய குளிசை வடிவிலான ஒன்று 400 ரூபா அடிப்படையில் அவர்களால் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட இருவரும் நீர்கொழும்பு நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.