(பாறுக் ஷிஹான்) யாழ் பல்கலைக்கழ மகளிர் விடுதியில் இடம்பெற்ற தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு சிவன் அறக்கட்டளை நிறுவன ஸ்தாபகரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் கொள்கை பரப்பு செயலாளருமான கணேஸ்வரன் வேலாயுதம் குழுவினரால் உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி (26 ) அன்று இடம்பெற்ற குறித்த தீ விபத்து தொடர்பாகவும் பாதிக்கப்பட்ட மாணவிகளின் நிலை தொடர்பாகவும் ஊடகவியலாளர் ஒருவர் விடுத்த வேண்டுகோளிற்கு இணங்க இவ்வுதவிகள் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன.
நேற்று (7) பல்கலைக்கழககத்தில் வைத்து குறித்த மாணவிகளுக்கு தேவையான மடிக்கணணி அத்தியாவசிய தேவைக்குரிய பண உதவியும் யாழ் பல்கலைக்கழக ஒன்றிய பிரதிநிதிகள் முன்னிலையில் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு வழங்க கையளிக்கப்பட்டது.
அத்துடன் கடந்த பெப்ரவரி ( 02) திகதி அன்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வடமாகாணசபை உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தேசிய அமைப்பாளருமான எம்.கே சிவாஜிலிங்கம் சிவன் அறக்கட்டளை நிறுவன ஸ்தாபகரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் கொள்கை பரப்பு செயளாளருமான கணேஸ்வரன் வேலாயுதம் வல்வெட்டிதுறை முன்னாள் நகரசபை உபதலைவர் சதீஸ் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு சென்று பார்வையிட்டு விபரங்களை கேட்டறிந்ததுடன் பாதிக்கப்பட்டவர்களிற்கு உதவி வழங்குவதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




