குழந்தைகள் இல்லாத வீடு பாலைவனமாய் வெறிச் சோடியிருக்கும். எத்தனை செல்வம் இருந்தாலும் குழந்தைச் செல்வம் இல்லையென்றால் அந்த வாழ்க்கையில் ஒருவித வெறுமை இருந்துகொண்டே இருக்கும். அவ்வாழ்க்கை பூரணத்துவம் அடையாது. மேலும், குழந்தைச் செல்வத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நம் சமூகத்தில், குழந்தையின்மையால் பாதிக்கப்பட்ட பெண்களும் சரி, ஆண்களும் சரி முகங்கொடுக்கும் சங்கடங்கள் எண்ணிலடங்கா! இந்தச் சங்கடங்களையும் கவலைகளையும் போக்கவே செயன்முறைக் கருத் தரிப்பு என்ற நவீன தொழில் நுட்பம் கண்டு பிடிக்கப்பட்டது.
இயற்கையான கருத்தரிப்புக்கும் செயன்முறைக் கருத்தரிப்புக்கும் வித்தியாசம் ஒன்று தான்! உடலுக்குள் நடைபெறும் கருமுட்டையும் உயிரணுவும் ஒன்றிணையும் நிகழ்வு, ஆய்வகத்தில் நடத்தப்படுகிறது.
இது தான் அந்த வித்தியாசம். இதயத்துக்கு வரும் இரத்த நாளங்களில் ஒன்று அடைபட்டு மாரடைப்பு ஏற்பட்டால், அதற்கு வேறொரு குழாயைப் பொருத்தி அதன் மூலம் இரத்தத்தை ஓடச் செய்கிறோமல்லவா? அதற்கு ஒப்பானதே இதுவும்!
குழந்தையின்மைக்கு சுமார் அறு பது சதவீதம் ஆண்களே காரணமா கிறார்கள் என்பது நிரூபணமான ஒன்று. உயிரணு எண்ணிக்கை குறைவு, உயிரணுவின் நீந்தும் தன்மை குறைவு, உயிரணுவின் அமைப்பில் குளறுபடி என்பனவே ஆண்களைப் பாதிக்கும் பிரதான குழந்தையின்மைக்கான காரணிகள்!
முன்னைய காலங்களில் இது போன்ற பிரச்சினை உள்ளவர் களுக்கு உயிரணு தானம் - அதாவது, பிற ஆண் ஒருவருடைய உயிரணுவைப் பெற்றுக்கொண்டு அதன் மூலமே குழந்தை பெற வேண்டியிருந்தது. ஆனால் இப்போது அதற்கான அவசியம் இல்லை. ஆண்களின் குறைபாடுகளைச் சரிசெய்யும் அளவுக்கு தற்போது மருத்துவ விஞ்ஞானம் வளர்ந்திருக்கிறது. எனவே, குழந்தையின்மையால் பாதிக்கப்பட்ட ஆண்கள் கவலையே இல்லாமல் சிகிச்சை பெற்றுக்கொண்டு குழந்தைகளுக்குத் தகப்பனாகலாம்.
குழந்தையின்மையால் ஒரு ஆண் பாதிக்கப்பட்டுள்ளாரா? என்பதை அவரது இரத்தத்தையும் ஏனைய சுரப்பிகளையும் பரிசோதிப்பதன் மூலம் அறிந்துகொள்ளலாம். உதார ணமாக, தைரொய்ட் சுரப்பியில் ஏதேனும் குளறுபடிகள் இருந்தால் அதற்கான மருந்துகளையோ அல்லது ஊசி மருந்துகளையோ கொடுத்து அதைச் சரிசெய்துவிடலாம்.
சிலருக்கு, விந்து வளர்ச்சியில் பங்கு வகிக்கும் ஹோர்மோன் பாதிக்கப்பட்டிருக்கலாம். இது போன்றவர்களுக்கு குறிப்பிட்ட ஹோர்மோனை ஆரோக்கியமான முறையில் சுரக்கச் செய்வதற்கான மருந்துகள் வழங்குவதன் மூலம், அவரது விந்தணுக்களை போதிய வளர்ச்சி பெறச் செய்யலாம். இதனால், தனது உயிரணுவிலிருந்தே குழந்தை பெற் றுக்கொள்ளும் வாய்ப்பு அவருக்குக் கிடைக்கும்.
விந்தணுப் பரிசோதனை என்பது, முன்னொரு காலத்தில் வருடக் கணக்கில் செய்யப்படும் ஒரு பரிசோதனையாக இருந்தது. ஆனால் இன்று அப்படியல்ல! ‘கம்ப்யூட்டரைஸ்ட் செமன் அனாலிஸிஸ்’ (Computerized Semen Analysis), அதாவது கணினி முறையிலான விந்தணுப் பரி சோதனை வந்துவிட்டது. இதன் மூலம் ஓரிரு மணித்தியாலங்களில் விந்தணுப் பரிசோதனையைச் செய்து விட முடிகிறது. இதனால், குழந்தையின்மையை நீக்கும் சிகிச்சைகளை உடனடியாகவே ஆரம்பித்து விடவும் முடிகிறது.
ஆணின் விந்தணுவில் பதினைந்து மில்லியன் உயிரணுக்கள் இருப்பது அவசியம். அவற்றில் நாற்பது சதவீதமானவை நன்கு நீந்தும் திறன் கொண்டனவாக இருப்பதும் அவசியம். மேலும், அந்த நாற்பது சதவீதத்தில் நான்கு சதவீதமான உயிரணுக்கள் சிறந்த அமைப்பைக் கொண்டனவாக இருக்க வேண்டும்.
கணினி முறையிலான விந்தணுப் பரி சோதனையில் உயிரணுக்கள் சுமார் ஏழாயிரம் மடங்கு பெரிதுபடுத்திப் பார்க்கப்படுவதால் சிறந்த அமைப்பும் நீந்தும் தன்மையும் கொண்ட உயிரணுக்களைத் தெரிவு செய்ய முடிகிறது. இதனால் ஓரிரு முயற்சிகளிலேயே செயன்முறைக் கருத்தரிப்பு அவர்களுக்குக் கைகூடு கிறது.
இப்போது,‘டி.என்.ஏ. ஃப்ரேக் மன்டேஷன்’ (DNA Fragmentation) என்ற பரிசோதனையும் செய்யப்படுகிறது. இது, ஒருவரது உயிரணுவில் உள்ள மரபணுக் குறைபாடுகளைக் கண்டறிந்து குறித்த உயிரணுக்களைத் தவிர்க்கவோ அல்லது அந்தக் குறை பாடுகளைச் சரிசெய்து செயன்முறைக் கருத்தரிப்பில் பயன்படுத்தவோ முடிகிறது. சில ஆண்களின் விந்தணுப் பரிசோதனைகளின் முடிவுகளில், உயிரணுக்களே இல்லை என்று தெரியவரும். இது தெரியவந்ததும், ‘உயிரணு இல்லாமல் எப்படி குழந்தைக்குத் தகப்பனாக முடியும்’ என்ற கவலை மனதைப் போட்டுக் குடையும். ஆனால், இனி அந்த பய மும் இல்லை!
உயிரணுக்கள் இல்லாத ஆண் களுக்கு ேஹார்மோன் பரிசோதனை களுடன் கூடவே ‘டெஸ்ட்டிக்கியூலர் பயொப்ஸி’ (Testicular Biopsy) என்ற ஒரு பரிசோதனையைச் செய் வோம். அதில், விரைப்பையில் இருந்து கொஞ்சமே கொஞ்சம் சதையைச் சுரண்டியெடுத்து, அதில்
உள்ள உயிரணுக்களைத் தேடி யெடுப்போம்.
இவ்வாறு தேடித் தேடிச் சேக ரிக்கும் உயிரணுக்களை போதிய முறையில் வலுவூட்டி அதைக் கொண்டே அவர்களுக்கு செயன் முறைக் கருத்தரிப்பு சிகிச்சைகளைச் செய்வோம். இதனால்,
உங்களுடைய உயிரணுவில் இருந்தே உங்களுக்குக் குழந்தை பிறக்கும் வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படுகிறது. எனவே உயிரணு இல்லை எனும் பிரச்சினையை எதிர்நோக்கும் ஆண்கள் இனி அது குறித்து பயப்படத் தேவையில்லை.
ஒருவேளை பயொப்ஸி முறை யில் பரிசோதனை செய்தும் உயிரணுக்கள் இல்லை எனத் தெரிந்தால் அவர்களுக்கு விந்தணு தானம் மூலம் குழந்தைப்பேற்றை உருவாக்கலாம். ஆண் ஒருவரை -அவர், தெரிந்தவராகவோ, தெரியாத வராகவோ, உறவினராகவோ கூட இருக்கலாம் - முழுமையாகப் பரிசோதனை செய்து, அவரது உயிரணுக்களில் குறைபாடுகள் ஏதும் இல்லை என்றும், அவர் முழுமையான ஆரோக்கியம் உடையவர் என்றும் கண்டுபிடிக்கப்பட்ட பின், அவரது உயிரணுவை எடுத்து கர்ப்பப்பையில் செலுத்தி கருவுற வைக்கலாம். சில ஆண்களுக்கு உடலுறவுச் செயற்பாட்டில்தான் தடுமாற்றங்களும் குறைபாடுகளும் இருக்கலாம். இது கூட குழந்தையின்மைக்கு வழிகோலலாம். இவ்வாறானவர்களுக்கு தகுந்த ஆலோசனை மற்றும் ‘வைப்ரேட்டர்’ (Viberator) மூலம் சில ஒத்துழைப்புக்களையும் வழங்கி குழந்தைப் பேற்றை உரு வாக்க முடியும்.
குழந்தையின்மையில், ஆண்கள் எதிர்நோக்கும் குறைபாடுகளைச் சரிசெய்வது என்பது இன்றைய நவீன மருத்துவத்துறையில் சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ள ஒன்றாகவே காணப்படுகிறது. எதிர்வரும் மார்ச் மாதம் 3, 4 மற்றும் 5 ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெறவுள்ள மருத்துவ கண்காட் சியில் நானும் பங்குபற்றுகிறேன். நீங்கள் விரும்பினால் அங்கு நேரடி யாகவே என்னைச் சந்தித்து உங்கள் பிரச்சினைகளுக்கு ஆலோசனை பெற்றுக்கொள்ள முடியும்.
-
குருசாமி
