Friday, March 31, 2017

மணலில் சிக்கிய வாகனத்துக்கு தனது கார் மூலம் உதவிய துபாய் இளவரசர் - வைரலாக பரவும் வீடியோ இணைப்பு!

துபாய் இளவரசர் செய்த உதவி ஒன்று தற்போது வீடியோவாக இன்ஸ்டாம்கிராமில் பதிவேற்றம் செய்யப்பட்டு அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது.

துபாயில் வாகனப்போக்குவரத்து அதிகம் இல்லாத மணல் நிறைந்த பாதையில் லாரி ஒன்று சிக்கி கொண்டு நகர முடியாமல் நின்றுள்ளது.


அப்போது, அந்த வழியாக வந்த பட்டத்து இளவரசரான ஷேக் ஹம்தான், அந்த லாரியை மீட்பதற்கு தனது காரினை கொடுத்து உதவியுள்ளார்.

இரண்டு வாகனங்கள் ஒன்று சேர்ந்து கயிறு கட்டப்பட்டு மணலில் புதைந்து கிடந்த லாரி மீட்கப்பட்டது.

பட்டத்து இளவரசரும், லாரியை மீட்கும்வரை அங்கேயே நின்று உதவி செய்துள்ளார். தற்போது இந்த வீடியோ இன்ஸ்டாம்கிராமில் பதிவேற்றம் செய்யப்பட்டு அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது.

ஒரு இளவரசராக இருந்த போதிலும் அவர் இந்த உதவியை செய்துள்ளார் என பாராட்டியுள்ளனர்.

அந்த வீடியோவை இங்கு நீங்கள் காணலாம்

Disqus Comments