கிழக்கு மாகாண புதிய தாதியர்க்கான நியமனங்கள் இன்று கிழக்கு மாகாண முதலமைச்சர்ஹாபிஸ் நசீர் அஹமட்டினால் இன்று வழங்கிவைக்கப்பட்டன,
கிழக்கு மாகாண சபைக்கட்ட்டத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற நியமனம் வழங்கும் நிகழ்வில்34 தாதியருக்கான நியமனங்கள் இங்கு வழங்கிவைக்கப்பட்டன.
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல் முஹம்மட் நஸீர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் கருணாகரன், உதவிச்செயலாளர் உசைனுடீன், மாவட்ட பணிப்பாளர் முருகாணந்தன் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டதுடன் அவர்களும் நியமனங்ளை வழங்கிவைத்தனர்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இந்த நிகழ்வில் பிரதம அதிதியாககலந்துகொண்டார்.
இதில்அம்பாறை பிராந்தியத்திற்கு 18பேரும், கல்முனைபிராந்தியத்திற்கு ஒரு வரும், மட்டக்களப்பு பிராந்தியத் திற்கு 05வரும், திருகோணமலை பி ராந்தியத்திற்கு 10பேருக்கான நி யமனம் வழங்கி வைக்கப்பட்டன.
கிழக்கில் தாதியர் பற்றாக்குறை நிலவி வரும் நிலையில் இந்த நியமனங்கள் பாரிய உதவியாக அமையும் என பல்வேறு தரப்பினரால் தெரிவிக்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது .


