தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு வர்த்தக நிலையங்களில் காலவதியான மற்றும் உரியநிறையற்ற பொருட்களை விற்பனை செய்தல் மற்றும் அதிக விலைக்கு விற்பனை செய்வது தொடர்பில் அறிவிப்பதற்காக நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்படி, 1977 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து இவ்வாறான முறைப்பாட்மை மேற்கொள்ள முடியும் என அந்த அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இதனிடையே தரமில்லாத பொருட்கள் விற்பனை செய்வது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அந்த அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
எனினும் கடந்த தினங்களுடன், தொடர்ந்து எதிர்வரும் நாட்களிலும் விஷேட சோதனை நடவடிக்கைகள் இடம்பெறும் என நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை மேலும் குறிப்பிட்டுள்ளது.
