இன்று நள்ளிரவு புனித கஃபதுல்லாவை இலக்கு வைத்து நடாத்தப்பட்ட தாக்குததலில் 11 பேர் காயமடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேற்படி தாக்குதல் புனித கஃபாவை இலக்கு வைத்து திட்டமிடப்பட்டிருந்த வேலை சவூதியின் பாதுகாப்பு அதிகாரிகளால் இந்த திட்டம் கண்டுபிடிக்கப்பட்டு முறியடிக்கப்பட்டுள்ளன.
என்றாலும் மூன்று மாடிக்கட்டிடன் ஒன்றில் இருந்த குண்டுதாரியினால் வெடிக்கப்பட்ட குண்டின் காரணமாக 11 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சிக்கிச்சை பெறுவதாகவும், அந்தக் கட்டிடம் தரை மட்டமாகியுள்ளதாக சவூதி கெஸ்ஸட் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேசகத்தின் பெயரில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


