|
கோட்டைக்கான நுழைவாயில் |
கற்பிட்டியில், ஒல்லாந்தர் காலத்தில் கட்டப்பட்ட கோட்டையினை பல தசாப்தங்களுக்கு பின் தற்போது பொது மக்களுக்கு பார்வையிட சந்தர்ப்பம் கிடைக்கப்பெற்றுள்ளது.
கோட்டையினை பார்வையிட விரும்புவோர் அடையாள அட்டைகளினை பதிவு செய்த பின் கடற்படையினை சேர்ந்த ஒருவரின் வழிகாட்டலில் கோட்டைக்குள் செல்வதற்கு அனுமதியளிக்கப்படுவதாக கற்பிட்டி கடற்படை அதிகாரியொருவர் தெரிவித்தார்.
கோட்டைக்குள் சென்றதும் கடற்படையினை சேர்ந்த வழிகாட்டியினால் கோட்டைக்குள் காணப்படும் பல்வேறு அம்சங்கள் தொடர்பாகவும் விளக்கமளிக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இங்கு திமிங்கிலத்தின் எலும்புகள், பழைய பிரமாண்டமான நங்கூரம் உட்பட பல பொருட்களை காணக்கூடியதாக உள்ளது.