Saturday, July 7, 2012

நாட்டை நடுங்க வைத்துள்ள பாலியல் சம்பவங்களை அனுமதிப்பதா???

((06-07-2012) நவமணி பத்திரிகையில் வெளியாகியுள்ள ஆசிரியர் தலையங்கத்தை இங்கு தருகிறோம்)

நாட்டில் தினமும் நடைபெறும் குற்றச்செயல்கள் குறித்து அதிர்ச்சிகர செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் மறுபுறம் பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் நாட்டை நடுங்கவைத்துள்ளது. தினமும் ஊடகங்களை நோக்கும்போது நாட்டின் ஏதோவொரு மூலையில் பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் நடைபெற்றுவருவது உறுதிசெய்யப்படுகிறது.

துஷ்யந்தினி கிருஷ்ணகுமார்
அந்தவகையில் கடந்தவாரம் கிருலப்பனையில் நடைபெற்ற சம்பவம் பாலியல் வல்லுறவில் ஈடுபடுவோர் மீது கடுமையான தண்டனையை வழங்கக்கோரும் நாட்டு மக்களின் கோரிக்கையும் வலுவடைந்துள்ளது. கொழும்பு பாமன்கடை இராமகிருஷ்ணா வித்தியாலயத்தில் தரம் ஒன்றில் கல்வி கற்கும், 6 வயதுடைய (சின்னஞ் சிறிய பாலகி) துஷ்யந்தினி கிருஷ்ணகுமார் என்ற சிறுமியின் படுகொலைச் சம்பவமாகும்.

தேவாலய உற்சவம் பார்ப்பதற்காக தனது மாமியார் வீட்டிற்கு மகள் துஷ்யந்தினியை அவரது தாயார் அழைத்துச் சென்றுள்ளார். ஆங்குசென்ற துஷ்யந்தினி தனக்கு பசியெடுப்பதாக கூறியுள்ளார். ஆவருக்கு உணவை ஊட்டுமாறு மாமியின மகளிடம் கூறிவிட்டு சகலரும் தேவாலயத்தின் உற்சவம் பார்க்கச்சென்றுவிட்டனர்.

இதன்போது அந்த வீட்டிலிருந்த மாமியின் மகனான ரவீந்திரன் துஷ்யந்தினியின் கையை பிடித்து விளையாடியபடியே வீட்டுக்கு வெளியே அழைத்துச்சென்றுள்ளார். சுpறுது நேரத்தின் பின்னர் துஷ்யந்தினியை காணவில்லை என்ற செய்தி பரவியதும் சகலரும் காணாமல்போன் சிறுமியை தேடியுள்ளனர். சிறுமியை கூட்டிச்சென்ற ரவீந்திரனும் இணைந்து தேடியுள்ளார். போலிஸாருக்கும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதன் முக்கிய திருப்பமாக தனது அண்ணா ரவீந்திரனுடன்தான் துஷ்யந்தினி அளையிpடல் சென்றார் என்பதனை அவரது தங்கை கூறியதையடுத்து சந்தேகத்தின் பேரில் உடனடியாகவே ரவீந்திரன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

விசாரணையின்போது தானே சிறுமியை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டுள்ளார். சம்பவம் நடைபெற்ற தினத்தன்று தானே சிறுமியை பாலியல் தேவைக்காக அழைத்துச்சென்றதாகவும், தான் மது அருந்தியிருந்ததாகவும், போதை மருந்து உபயோகித்திருந்ததாகவும், சிறுமி துஷ்யந்தினியுடன் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டிருந்தவேளை மற்றுமிரு நண்பர்களும் தன்னுடன் இணைந்துகொண்டதாகவும், அவர்களும் சிறுமியை பாலியல் துன்புறத்தல் செய்ததாகவும், இதன்போது சிறுமி துஷ்யந்தினி அழத்தொடங்கி அம்மாவுடன் கூறப்போவதாக சொன்னதாகவும் ரவீந்திரன் பொலிஸாரிடம் வழங்கிய வாக்குமூலத்தின் தெரிவித்துள்ளார்.

மேலும் சிறுமி துஷ்யந்தினி இவ்வாறு அம்மாவிடம் கூறப்போவதாக கூறியதும், தனது நண்பர்கள் இருவரும், சிறுமியை கால்வாய்க்குள் தூக்கி வீசுமாறு யோசனை கூறவே, தாம் மூவரும் இணைந்து கதறக் கதற துஷ்யந்தினியை கழிவுக் கால்வாய்க்குள் துக்கி வீசியதாகவும், அப்போது அவள் |அம்மா| என்று கத்தியபோதும், அதனை பொருட்படுத்தாது அங்கிருந்து தப்பியோடி, வீட்டுக்குச்சென்று உடை மாற்றிவிட்டு தானும் உறவினர்களுடன் இணைந்;து சிறுமியை தேடியதாகவும் ரவீந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

ரவீந்திரனின் இந்த வாக்குமூலமானது சிறுவர்கள் தமது சுயபாதுகாப்பிலும், பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் பாதுகாப்பிலும் எந்தளவு தூரம் ஆhவத்துடன் செயற்பட வேண்டுமென்பதை நமக்கு மீண்டுமொருமுறை உணர்த்தியுள்ள நிலையில், பெற்றோர் தமது பிள்ளைகள் தொடர்பில் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் செயற்பட வேண்டுமென்பதை இச்சம்பவம் மூலம் ஒவ்வொரு பெற்றோரும் அறிந்துகொள்ள வேண்டுமென கிருலப்பனை பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி அருண சந்திரபால வலியுறுத்திக்கூறியுள்ளார்.

மத விழுமியங்களும், கலாசார பண்பாடுகளும் பலமாக பேணப்படும் இலங்கை போன்ற நாடுகளில் இவ்வாறான பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் சம்பவங்கள் தற்போது தொடர்கதையாகி இருப்பது உண்மையிலேயே வெட்கப்படவேண்டிய ஒன்றாகும். சிறுவர் அபிவிருத்தி அதிகார சபை தகவல்களின்படி இவ்வாறான சம்பவங்களுக்கு ஒரு காரணமாக அமைவது இந்தக்கொடூர செயல்களை புரிபவர்களுக்கு நீதிமன்றம் வழங்கும் தண்டனை போதாமல் இருப்பதாகும்.

இதுபோன்ற இழிவான செயல்களை புரிபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டிருக்குமாயின் சிறுமி துஷ்யந்தினியின் உயிரை சிலவேளைகளில் காப்பாற்றியிருக்கலாம்.

அரபுநாடுகளில் குற்றம்செய்பவர்களுக்கு வழங்கப்படும் தண்டனைதான் அங்கு குற்றச்செயல்கள் குறைந்திருப்பதற்கு பிரதான காரணமாகும். குறிப்பாக இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுபவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனை போதாமை காரணமாகவே மீண்டும் மீண்டும் இவ்வாறான துஷ்பிரயோகங்கள் நடைபெறுகிறது. சிறுவர்களின் எதிர்காலம் இருள்மயமாக்கப்படுகிறது.


ஐக்கிய நாடுகள் சபை 1988 இல் இயற்றிய சட்டத்தின் அடிப்படையில் 18 வயதிற்கு உட்பட்டவர்கள் சிறுவர்கள் எனப் பிரகடனப்படுத்தப்படுகிறது. 1991 ஆம் ஆண்டில் இலங்கை அரசாங்கமும் ஐக்கிய நாடுகள் சபையின் இந்த சிறுவர் சாசனத்தை ஏற்றுக்கொண்டு கையொப்பமிட்டுள்ளதுடன் சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதாகவும் உறுதிமொழி வழங்கியுள்ளது.

டாக்டர் ரஜத் மித்திராவின் ஆய்வின்படி சிறுவர் துஷ்பிரயோகம் நடைபெறுவதற்கு பின்வரும் காரணங்கள் அடிப்படையாக அமைகிறது. சிறுவர்களின் பாதுகாப்பற்ற தன்மை, பெற்றோரின் கவனக்குறைவு, பொருளாதார பலவீனநிலை, சிறுவர்களின் அறிவீனம், பெற்றோரின் விவகாரத்து நடவடிக்கைகள், தாய் - தந்தihயன் ரெவளிநாட:டு பயணம், பெற்றோர் கல்வியறிவின்மை, கையடக்க தொலைபேசிகள் மற்றும் இணையத்தளங்கள், மதுபானம், போதைவஸ்து உபயோகம், தன்மைப்பட்டிருத்தல் ஆகியனவாகும்.

அதேநேரம் 2000 ஆண்டுமதல் 2010 ஆம் ஆண்டுவரை இலங்கையில் 27.003 சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக சிறுவர் அபிவிருத்தி, மகளிர் விவகார அமைச்சின் அறிக்கை குறிப்பிடுகிறது. இதே காலப்பகுதியில் 10164 சிறுமிகள் பாலியல் துண்பிரயோகத்திற்கு முகம்கொடுத்துள்ளனர்.

2011 ஆம் ஆண்டில் அதாவது கடந்தவரும் 1160 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்பட்டுள்ளனர்.

கிடைக்கப்பெறும் தகவல்களின்படி இவ்வருடத்தின் முதல் 6 மாதங்களில் பலநூறு பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக அறியவருகிறது.

இந்நிலை தொடருமாயின் இலங்கையும், இலங்கை சிறுவர், சிறுமிகளும் மிகப்பெரும் சவாலை எதிர்கொள்ளவேண்டிய துர்ப்பாக்கிய நிலையேற்படலாம். இதிலிருந்து மீளவேண்டுமாயின் உடனயாக தண்டனைகள் சீரமைக்கப்படவேண்டும். துண்டனைகள் மாத்திரமே குற்றச்செயல்களை குறைக்க உதவும்.


ஆம், அரசாங்கம் என்ன செய்யப்போகிறது..??

Disqus Comments