சூரை மீனை உண்ட பலர் ஒவ்வாமை காரணமாக மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மூதூர் பிரதேசத்தில் இன்று புதன் கிழமை விற்கப்பட்ட சூரை மீனை வாங்கி சமைத்து சாப்பிட்டவர்களே ஒவ்வாமைக்கு உள்ளான நிலையில் இன்று மாலையிலிருந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மீனை சாப்பிட்டவர்கள் வயிற்றுவலி,தலைவலி,வாந்தி,வயிற்றோட்டம் ஆகிய உபாதைகளுக்குஆளானதைத் தொடர்ந்தே அவர்கள் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சூரை மீன் அதிகமாக பிடிபடுவதன் காரணமாக அவை குறைந்த விலையிலேயே விற்கப்படுகின்றன என்பதாக அங்கிருந்து கிடைக்கப் பெறும் தகவல்கள் தெரிவிக்கின்றன.