Thursday, September 26, 2013

சூரை மீன் உட்கொண்டமையால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவர் உயிரிழப்பு

மூதூரில் சூறை மீன் உட்கொண்டையினால் திடீர் சுகவீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஆண்  ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உணவுடன் சூறை மீனை உட்கொண்டதன் காரணமாக திடீர் சுகவீனமுற்ற நிலையில் அந்த பகுதியிலுள்ள 25 பேர் நேற்றிரவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி நள்ளிரவு உயிரிழந்ததாக மூதூர் வைத்தியசாலையின் அத்தியட்சகர் டொக்டர் வீ. பிரேம் ஆனந்த் தெரிவித்தார்.
சூறை மீனை உணவுடன் உட்கொண்டவர்களுக்கு உடலில் தடிப்பு மற்றும் படபடப்பு ஆகிய உபாதைகள் ஏற்பட்டிருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து மருத்துவ பரிசோதனைகள் முன்னெடுக்பட்டுவருவதாகவும் மூதூர் தல வைத்தியசாலையின் அத்தியட்சகர் டொக்டர் வீ. பிரேம் ஆனந்த் மேலும் கூறியுள்ளார்.
Disqus Comments