Sunday, September 22, 2013

தனித்துப் போட்டியிட்ட SLMCக்கு 3 சபைகளிலும் 4 ஆசனங்கள்

நடந்து முடிந்த வட, வடமேல், மத்திய மாகாண தோ்தல் முடிவுகளின் படி மூன்று சபைகளிலும் தனித்துப் போட்டியிட்ட ஸ்ரீ-லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 4 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. வட மாகாணத்தில் ஒரு ஆசனத்தையும், வடமேல் மாகாணத்தில் இரு ஆசனங்களையும், மத்திய மாகாணத்தில் ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இதுதொடர்பில் கட்சியின் செயலாளர் ஹசன் அலி ஊடகத்திற்கு கருத்து வெளியிடுகையில்,

எமது கட்சிக்கு ஆதரவளித்த சகலருக்கும் முஸ்லிம் காங்கிரஸ் நன்றி தெரிவிக்கிறது. வெற்றியீட்டிய சபைகளில் எப்படி செயற்படுவது என்பது குறித்து எமது கட்சி உயர்பீடம் தீர்மானிக்கும்.

அச்சுறுத்தல் எச்சரிக்கை கழுத்தறுப்பு உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில்தான் இந்த வெற்றி எமது கட்சிக்கு கிடைத்தது. வடமாகாணத்தில் முதற்தடவையாக ஒரு ஆசனம் கிடைத்துள்ளது. குருநாகலில் ஒரு ஆசனத்தை இழந்துள்ளோம். தவறுகளை எதிர்காலங்களில் திருத்திக்கொண்டு முஸ்லிம் காங்கிரஸ் தொடர்து பயணிக்கும் எனவும் ஹசன் அலி தெரிவித்தார்.
Disqus Comments