Monday, June 23, 2014

சர்வதேச சந்தைக்கு இலங்கையிலிருந்து மாதாந்தம் 2 இலட்சம் இளநீர்

இலங்கையிலிருந்து மாதாந்தம் 200 , 000 இளநீர் சர்வதேச சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக லுணுவில தெங்கு ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

கடந்த காலங்களில் பெரும்பாலும் உள்நாட்டு சந்தைக்கே இளநீர் விநியோகிக்கப்பட்டதாக நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி ஜயந்த குணதிலக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

வருடாந்தம் சுமார் 6500 இளநீர் மாத்திரமே ஏற்றுமதி செய்யப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் தற்போது சர்வதேச சந்தையில் இளநீருக்கான கேள்வி அதிகரித்துள்ளது.

இங்கிலாந்து ,  சுவிற்சர்லாந்து ,  ஜேர்மன் ,  பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கே அதிகளவில் இளநீர் ஏற்றுமதி செய்யப்படுகின்றது.

மத்திய கிழக்கு நாடுகளிலும் இலங்கையின் இளநீருக்கு கேள்வி அதிகரித்துள்ளதாக தெங்கு ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

இளநீர் ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில் விமானம் மூலம் அதனை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் நிலையத்தின் பணிப்பாளர் தெரிவித்தார்.
Disqus Comments