Tuesday, June 17, 2014

ஊரடங்கை மீறிய 9 பேர் உட்பட 50 பேர் கைது

அளுத்கமை மற்றும் பேருவளை பிரதேசங்களில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மீறிய 9 பேரையும், எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு களுத்துறை மேலதிக நீதவான் அயேஷா ஆப்தீன் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, அளுத்கமை மற்றும் பேருவளை பிரதேசங்களில் இடம்பெற்ற பதற்றமான சூழ்நிலைக்கு காரணமானவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 41பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.

அத்துடன், அளுத்கமை பிரதேசத்தின் பாதுகாப்புக்காக பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த 10,000 பேர் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.
Disqus Comments