Saturday, November 15, 2014

2 மாதங்களில் 2 லட்சம் பேருக்கு அடையாள அட்டை


எதிர்வரும் தேசிய தேர்தல் ஒன்றை முன்னிட்டு வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளவர்களுக்கு அடையா அட்டை பெற்றுக் கொடுக்கும் நடமாடும் சேவை நாளை (15) ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

தேர்தல்கள் செயலகம் மற்றும் கபே இயக்கத்துடன் இணைந்து இந்த நடமாடும் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முதல் கட்டம் நாளை (15) திருகோணமலையில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

திருகோணமலை மாவட்டத்தில் 15,200 பேர் அடையாள அட்டை இன்றி இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. 

எதிர்வரும் 2 மாதங்களில் 2 லட்சம் பேருக்கு அடையாள அட்டை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Disqus Comments