சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் அதிக அரைச்சதம் எடுத்தவர்கள் வரிசையில் இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார்சங்கக்கார இரண்டாவது இடத்திற்கு முன்னேறி புதிய சாதனை படைத்துளளார்.
சங்கக்கார இதுவரை 2 ஆவது இடத்தில் இருந்து வந்த தென்னாபிரிக்க வீரர் காலிஸை பின்தள்ளி 2 ஆவது இடத்திற்கு முந்தியுள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான நேற்றைய போட்டியில் சிறப்பாக விளையாடிய சங்கக்கார தனது ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 87ஆவது அரைச்சதத்தை பூர்த்தி செய்தார். இதன் மூலம் தென்னாபிரிக்க வீரர் காலிஸை பின்தள்ளி சாதனை படைத்துள்ளார்.
இந்திய அணியின் மாஸ்ட பட்ஸ்மன் சச்சின் தொடர்ந்து 96 அரைச்சதத்துடன் முதலிடத்திலுள்ளார். இரண்டாவது இடத்திற்கு சங்கக்கார முன்னேறியுள்ளார். காலிஸ்(86), டிராவிட்(83), இன்சமாம்(83), பொண்டிங் (82), ஜெயவர்தன (74) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
