எஜமானின் வீட்டில் 17 இலட்சத்து 81 ஆயிரத்து 825 ரூபாய் பெறுமதியான நகைகளை திருடிய குற்றச்சாட்டில் இலங்கையைச்சேர்ந்த பணிப்பெண்ணுக்கு டுபாய் குற்றவியல் நீதிமன்றம் மூன்று மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
தண்டனை நிறைவடைந்ததும் அந்த பெண்ணை இலங்கைக்கு நாடு கடத்தவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறித்த பணிப்பெண், எஜமானின் வீட்டில் மூன்று மாதங்களாக பணியாற்றிய நிலையில் கடந்த ஜூன் மாதம் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வீட்டில் இருந்த தங்க நகைகளும் காணாமல் போயுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து டுபாய் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டதன் பின்னர் குறித்த பெண்ணை அந்நாட்டு பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்.
அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டமையால் அவருக்கு மூன்று மாத கால சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
.jpg)