பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக பொதுமக்கள் தொடர்பாடல் அமைச்சின் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிடம் இன்று சனிக்கிழமை(17) முறைப்பாடுசெய்துள்ளார்.
கடந்த ஆட்சிக்காலத்தில் இவ்விருவரும் செய்த ஊழல்கள் தொடர்பிலேயே அவர் முறைப்பாடு செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
