எரிபொருட்களின் விலை குறைக்கப்பட்டதை அடுத்து நிச்சயமாக தனியார் பஸ் கட்டணங்களும் குறைக்கப்படும் என இலங்கை போக்குவரத்து தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன, தெரிவித்தார்.
தனியார் பஸ் கட்டணங்கள் சூத்திரத்தின் அடிப்படையிலேயே குறைக்கப்படும் என அவர் தெரிவித்தார். பஸ் கட்டணங்கள் 2013ஆம் ஆண்டு அதிகரித்திருந்தது. கடந்த வருடம் இக்கட்டணங்கள் குறைக்கப்பட்டிருக்கவில்லை. -
