Tuesday, January 20, 2015

கட்டார் வாகன விபத்தில் உயிரிழந்த இலங்கையர்களின் சடலங்களை நாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை

கட்டாரில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த இலங்கையர்கள் மூவரினதும் சடலங்களை நாளை நாட்டுக்கு கொண்டுவர  நடவடிக்கை எடுத்துள்ளதாக ​வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
இந்த விபத்தில் பெரியநீலாவணையைச் சேர்ந்த  மூவரே உயிரிழந்துள்ளனர். கலாமோகன் கஜானந்தன், தங்கராசா ரஜிப்கிருஷாந்தன், மற்றும்  சின்னையன் கோபி என்ற  மூன்று இளைஞர்களே விபத்தில் உயரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
கட்டாரில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த இளைஞர்களின் உறவினர்கள் சிலர் நியூஸ் பெர்ஸ்டுக்கு கருத்து வெளியிட்டனர்.
இந்த மூன்று சடலங்களும் கட்டாரிலுள்ள ஹமாட் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த விபத்தில் காயமடைந்த மற்றுமொரு   இலங்கையரும் ஹமாட் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர்  மங்கல ரந்தெனிய குறிப்பிட்டார்.
நேற்று முன்தினம் சிறிய ரக வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் இவர்கள் உயிரிழந்தமை குறிப்பிட்டத்தக்கது.
Disqus Comments