Monday, January 19, 2015

பிலியந்தலையின் ஒழித்து வைக்கப்பட்டிருந்த லம்போகினி கார் கண்டுபிடிப்பு.

பிலியந்தல பகுதியில் இராணுவத்தினருடன் தொடா்புள்ளதாக கருதப்படும் நபா் ஒருவரின் வீட்டிலிருந்து அதி நவீன  லம்போகினி கார் ஒன்று  கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனா்.

கண்டுபிடிக்கப்பட் இந்த லம்போகினி காரின் உரிமைப் பத்திரம் இன்னும் பொலிஸாரிடம் சமா்க்கப்பிக்கப்படவில்லை என்றும் அவ்வாறு  கையளிக்கப்படாத பட்சத்தில் குறிப்பிட்ட  கார் பொலிஸாரால் கைப்பற்றப்படும் என்பதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.

குறிப்பிட்ட கார் தோ்தல் முடிவுகளை வெளியிட்பட்ட வேலையே இந்த வீட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், காரின் உரிமையாளா் மிக பிரபல அரசியல்வாதி ஒருவரின் மகன் எனவும் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது. 

குறிப்பிட்ட வகை லம்போகினி தயாரிப்பு நிறுவனத்தில் இலங்கைக் காசுக்கு  காரின் பெறுமதி 7 கோடிக்கு மேல் என்பதாகவும் அறியக்கிடைக்கின்றது.
Disqus Comments