இன்று WHATSAPP இல்லாதே SMART போன்கள் கிடையாது எனலாம். அந்ந அளவிற்கு WHATSAPP மக்கள் மத்தியில் பிரபல்யம் அடைந்து விட்டது. WHATSAPP ஆனது தனது வாடிக்கையாளா்களுக்கு புதிய புதிய வசதிகளை அளித்துக் கொண்டே இருக்கின்றது. அந்த வகையில் போன்களில் நாம் பயன்படுத்தும் WHATSAPP ஐ கணணியிலும் பயன்படுத்துத்தும் வகையில் வசதிகளை அளித்துள்ளது WHATSAPP.
இந்த வசதியைப் பயன்படுத்த https://web.whatsapp.com/ என்ற இணையதளத்திற்கு செல்லவும். அங்கு சென்றவுடன் படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு இருக்கும்.
![]() |
| படம் 1 |
உடனே உங்களது போனை எடுத்து நீங்கள் நிறுவியுள்ள WHATSAPP ஐ திறவுங்கள். அங்கு WHATSAPP மெனுவுக்கு சென்று WHATSAPP WEB கிளிக் செய்யுங்கள்.
![]() |
| படம் 2 |
உடனே திறக்கும் உங்களது கெமராவைக் கொண்டு மேலுள்ள படத்தில் காட்டப்பட்டுள்ள QR CODE ஐ SCAN செய்யுங்கள். அவ்வளதான். உங்களது மெமைலில் உள்ள WHATSAPP ஐ அப்படியே உங்களது கணணியிலும் பாவிக்கலாம்.
தற்போது இந்த வசதி GOOGLE CHROME BROWSERயில் மட்டுமே இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக நீங்கள் FIREFOX க்குச் சென்றால் கீழ்வறுமாறு தோன்றும்.
குறிப்பு. 1ம் படத்தில் காட்டப்பட்டுள்ள KEEP ME SIGN IN என்று குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில் UNCHECK செய்து கொள்ளுங்கள். இல்லையெனில் மீண்டும் நீங்கள் https://web.whatsapp.com/ தளத்திற்கு செல்லும் போது தானாகவே உங்களது WHATSAPP OPEN ஆகிவிடும்.



