பிரதான புகையிரதங்களில் இலவச WI FI இணைய வசதியை ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக புகையிரத பொது முகாமையாளர் விஜய அமரதுங்க தெரிவித்துள்ளார். இதன் மூலம் பயணிகள் தங்களது கையடக்கத் தொலைபேசி, மற்றும் மடிக்கணினிகளை இணையத்துடன் இணைத்துக் கொள்ள வாய்ப்பு ஏற்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
உள்ளக போக்குவரத்து அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டாரவுடன் இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடலை மேற்கொண்டதன் பின்னர் இந்த இலவச சேவையினை பயணிகளுக்குப் பெற்றுக் கொடுக்கும் பணி ஆரம்பிக்கப்படும் எனத் தெரிய வருகின்றது.