Sunday, March 8, 2015

ஈராக் - நுழைவாயிலில் தலைகீழாக தொங்கவிடப்பட்ட 8 படைவீரர்களது சடலங்கள்

ஈராக்கிய நகரொன்றின் நுழைவாயிலிலுள்ள இரும்புச்சட்டத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட 8 படைவீரர்களின் சடலங்கள் தொங்கவிடப்பட்டிருப்பதை வெளிப்படுத்தும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
வடஈராக்கிய நகரான ஹவிஜாவில் மேற்படி புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.
மேற்படி புகைப்படத்தில் தலைகீழாக தொங்கவிடப்பட்ட சடலங்களுக்கு மேலாக ஐ.எஸ். தீவிரவாதிகள்  போன்ற தீவிரவாதி குழுக்களால்  பயன்படுத்தப்படும் சர்ச்சைக்குரிய கறுப்புகொடி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
மேற்படி புகைப்படங்களிலொன்றில் தோன்றும் ஐ.எஸ்.தீவிரவாதியொருவர் அபு அல்ரஹ்மான் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அவர் தம்மால் கொல்லப்பட்ட சிரிய பிரஜைகளது தலைகளுடன் தோன்றும் புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Disqus Comments