Saturday, March 7, 2015

ஸ்ரீ.சு. கட்சியின் தடையையும் மீறி கண்டி கூட்டத்தில் கலந்துகொண்ட 87 உறுப்பினர்கள்

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷவை பிர­த­ம­ராக்கும் நோக்­குடன் கண்டி மத்­திய சந்­தைக்கு முன் நடை­பெற்ற கூட்­டத்தில் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் தடை­யையும் மீறி பலர் கலந்­து­கொண்­டனர். மத்­திய மாகாண முன்னாள் ஆளுனர் டிக்­கிரி கொப்­பே­க­டுவ, கண்டி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் திலும் அமு­னு­கம உட்­பட மாகாண சபைகள், உள்­ளு­ராட்சி மன்­றங்­களை சேர்ந்த 87 உறுப்­பி­னர்கள் கலந்­து­கொண்­டனர்.
மக்கள் ஐக்­கிய முன்­னணி,தேசிய சுதந்­திர முன்­னணி,ஜன­நா­யக இட­து­சாரி முன்­னணி, தூய்­மை­யான ஹெல உறு­மய உட்­பட பல்­வேறு கட்­சிகள் இணைந்து முன்னாள் ஐனா­தி­பதி மகிந்த ராஜ­பக்­சவை பிர­த­ம­ராக்க வேண்டும் எனக்­கோறி நாட­ளா­விய ரீதியில் நடத்­தப்­பட்டு வரும் கூட்டத் தொடரின் இரண்­டா­வது கூட்­ட­மா­கவே நேற்று கண்­டியில் இடம்­பெற்­றது.
இங்கு முன்னாள் ஜனா­தி­ப­தியின் ஆசிச் செய்­தியை வழங்­கிய முன்னாள் மத்­திய மாகாண ஆளுனர் டிக்­கிரி கொப்­பே­க­டுவ, தாய்­நாட்டை பாது­காப்­ப­தற்­காக முன்­வந்­த­வர்­க­ளுக்கு எவ்­வித தண்­டணை கிடைத்­தாலும் அது ஒரு ஆசீர்­வா­த­மாகும். எனவே எவ்­வித தடை­யையும் பொருட்­ப­டுத்­தாது தாய்­நாட்டை பாது­காப்­ப­தற்கு முன்­வரத் தயா­ராக உள்­ள­தா­கவும் அதற்­காக மக்கள் கூறும் எத்­த­கைய பாத்­தி­ரத்­தையும் ஏற்கத் தயார் எனத்­தெ­ரி­வித்­துள்­ள­தா­கவும் வாசித்­துக்­கட்­டினார்.
வாசு­தேவ நானா­யக்­கார
முன்னாள் அமைசச்ர் வாசு­தேவ நானா­யக்­கார இங்கு கருத்து தெரி­விக்­கை­யில, ஐக்­கிய தேசிய கட்­சியின் தலை­வர்கள் அறி­வற்­ற­வர்­க­ளாக செயற்­ப­டு­கின்­றனர். நாங்கள் மஹிந்த ராஜ­ப­க்ஷ­வுக்கு அர­சியல் களத்தில் இடம் பெற்­றுக்­கொ­டுக்­கவே முன்­வந்­துள்­ள­தாக தவ­றாக தெரி­விக்­கின்­றனர். அது முற்­றிலும் பொய்­யா­ன­தாகும். மஹிந்த ராஜ­பக்ஷ இந்­நாட்டில் அதி உயர் பத­வியை வகித்­துள்ளார். அவ­ருக்கு வேறு எப்­ப­த­வி­யையும் எங்­களால் பெற்­றுக்­கொ­டுக்க முடி­யாது. நாங்கள் முயற்­சிப்­பது இந்­நாட்டை பாது­காப்­ப­த­ற­காகும். ஸ்ரீ லங்கா சுதந்­தி­ரக்­கட்சி அங்­கத்­த­வர்­க­ளுக்கு இக்­கூட்­டத்­திற்கு சமூகம் அளிப்­ப­தற்கு கட்சி தடை விதித்­துள்­ளது. ஆனால் அத்­த­டை­களை மீறி நூற்­று­க­ணக்கில் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியின் மாகாண சபைகள் மற்றும் உள்­ளு­ராட்சி மன்­றங்­களின் உறுப்­பி­னர்கள் சமூகம் தந்­துள்­ளனர். இறு­தி­யாக தடயை விதித்த ஸ்ரீ லங்கா சுதந்­திர கட்சி தனித்து விடும் அபாயம் உள்­ளது என்றும் தெரி­வித்தார்.
மஹிந்த ராஜ­பக்ஷ நாட்­டுக்கும் மக்­க­ளுக்கும் தேவையே ஒழிய மஹிந்­த­விற்கு ஆட்­சிக்கு வர எவ்­வித தேவையும் இல்லை. இன்று நாடு ஏகா­தி­பத்­தி­வா­திகள் வசம் சென்­று­கொண்­டுள்­ளது. எமது பலம் ஏகா­தி­பத்­தி­ய­வா­தி­க­ளிடம் செல்­லாது அதனை பாது­காக்க தைரியம் மிக்க தலை­வ­ரான மஹிந்த தேவைப்­ப­டு­கி­னறார் என்றும் கூறினார்.
உதய கம்­மன்­பில
இக்­கூட்­டத்தில் உரை­யாற்­றிய பிவித்­துரு ஹெல உறு­மய கட்­சியின் தலைவர் உதய கம்­மன்­பில தெரி­வித்­த­தா­வது,
வர­லாற்று ரீதி­யாக இலங்­கையை ஆண்ட மன்­னர்­களில் எட்­டுப்போ் மட்­டுமே நாட்டை ஓர­ணியில் கொண்­டு­வந்­தனர். 1600 வருட சரித்­தி­ரத்தில் எட்­டுப்போ். அதில் துட்­ட­கை­மு­னு­விற்குப் பிறகு ஒரு கொடியின் கீழ் இணைந்­தவர் மகிந்த ராஜ­பக்­ச­வாகும். இவர் ஒரு யுக புருசர். யுகத்தின் தேவை­கொண்­டவர்.
கடந்த காலங்­களில் நடந்த தோ்தல்­களில் தோல்­வி­ய­டைந்­த­வர்­களை சந்­தி­ரிக்கா அம்­மையார் ஒன்­றி­ணைக்க சென்ற போது அவர்­களை தடுக்க ஸ்ரீல.சு.க.வின் செய­லா­ள­ருக்கு முடி­ய­வில்லை. ஆனால் இன்று வெற்றி அடைய நாம் கட்சி அங்­கத்­த­வர்­களை அழைத்தால் அதற்­குத தடை போடு­கிறார். அதா­வது அவர் கட்சி தோல்வி அடை­வதை விரும்­பு­கிறார். நாம் அப்­ப­டி­யல்ல.
தேசிய அரசு எண்­ணக்­கரு மூலம் தமிழர் விடு­தலைக் கூட்­டணி எதிர்க்­கட்­சி­யாகப் போகி­றது. ஏன் தெரி­யுமா? இன்று எதிர்க்­கட்­சி­யாக இருப்­பது நாளை ஆளும்­கட்­சி­யாக வரலாம் என்­ப­தற்­கா­க­வே­வ­யாகும். என­வேதான் தேசிய அரசு என்ற கூட்டு மூலம் ஐ.தே.க.வும். ஸ்ரீல.சு.க சோ்ந்து பிர­தமர், உதவிப் பிர­தமர் என பத­வி­களைப் பிரித்­துக்­கொள்ள தமிழர் கூட்­டணி எதிர்க்­கட்­சி­யாகப் போகி­றது. அச்­ச­தியை முறி­ய­டிக்­கவே நாம் புறப்­பட்­டுள்ளொம். தூய்­நாட்­டிற்கு ஆபத்து வந்­தள்­ளது. தாய்­நா­டிற்கு ஆபத்து வரும் போது தாய்­நாட்டைக் காப்­பாற்­றி­யவர் தேவை அல்­லவா. ஆத­னால்தான் நாம் மகிந்­தவை ஆட்­சியில் அமர்த்­தப்­போ­கிறோம் என்றார்.
விமல் வீர­வன்ச
மகிந்­தவின் எழுச்­சியைக் கண்ட அரசு அடுத்த தோ்தலுக்கு சாக்குப் போக்கு சொல்லி காலம் தாழ்த்தி வரு­கி­றது. வெகு விரைவில் தோ்தல் ஒன்று நடக்க மாட்­டாது என்று முன்னாள் அமைச்சர் விமல் வீர­வன்ச தெரி­வித்தார்.
மகிந்த ராஜ­பக்­சவை ஆட்­சியில் அமர்த்­து­வது தொடா­பாக கண்­டியில் இடம்­பெற்ற கூட்­டத்தில் உரை­யாற்றும் போதே அவர் இதனைத் தெரி­வித்தார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,
ரணி­லுடன் தேசிய அரசு ஒன்றை அமைக்க யாரும் விரும்­ப­வில்லை. ஏனெனில் தோ்தலில் போட்­டி­யிட்டு வெற்­றி­பெற முடி­யாத ஒருவர் பிர­த­ம­ராக செயற்­பட மக்கள் விரும்­வில்லை. வெற்றி பெற முடி­யாத ஒருவர் தந்­தி­ர­மாக தேசிய அரசு என்ற போர்­வையில் ஆட்சி அமைக்க விரும்­பு­கிறார்.
ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் கதை­களைக் கெட்­கும்­போது சிரிப்­புத்தான் வரு­கி­றது. யாழ்ப்­பா­ணத்தில் அமைக்­கப்­பட்­டுள்ள வௌிநாட்டுத் தூது­வர்கள் மற்றும் பிர­தி­நி­தி­களின் தங்கு விடு­தியை அரச உடை­மை­யாக்கப் போகி­றாராம். அரசின் செலவில் கட்­டப்­பட்ட கட்­டிடம் அரச உடை­மை­யல்­லாது வேறு என்ன? இது­கூட அவ­ருக்குத் தெரி­யாது.
மிந்த ராஜ­பக்­சவால் வென்­றெ­டுக்­கப்­பட்ட எமது தாயகம் இன்று மறு­பக்கம் புறட்­டப்­ப­டு­கி­றது. எதி­ரி­களின் கைகளில் ஒப்­ப­டைக்­கப்­பட்டு வரு­கி­றது. லெம்­போ­கினி என்­றார்கள், கண்­டேனர் கணக்கில் தங்கம் என்­றார்கள். இவை எல்லாம் எங்கே. ஆவை எதுவும் கண்­டு­பி­டிக்­கப்­பட வில்­லையே. நல­லாட்சி எங்கே போகி­றது என்­பதை இன்னும் சில நாட்­களில் பராத்­துக்­கொள்­ளுங்கள். நுகேொடை கூட்­டத்­தைக்க கண்­டதும் பயந்து விட்­டார்கள். நுகே­கொ­டையில் பயந்­த­வர்­க­ளிடம் கூறு­கின்றோம் அடி­மட்­டத்தை எடுத்­துக்­கொண்டு வாருங்கள். நீளம் எவ்­வ­ளவு அகலம் எவ்­வ­ளவு என்று அளந்து குறி­யுங்கள். அதனை சது­ரக்­கட்­டங்­க­ளாக்­குங்கள். ஒரு சது­ரக்­கட்­டத்­தினுள் எத்­தனை தலைகள் என்று எண்­ணுங்கள். அதனைக் கொண்டு மொத்த எண்­ணிக்­கையை கணக்­கி­டுங்கள் என்றார்.
தினேஷ் குண­வர்­தனா
ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியை நாம் பிள­வு­ப­டுத்­த­வில்லை. பதி­லாக அதனைப் பாது­காத்து வளர்த்து வந்­துள்ளோம் என்று முன்னாள் அமைச்சர் தினேஷ் குண­வர்­தனா தெரி­வித்தார்.
அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியால் பல்­வேறு தடைகள் போடப்­பட்ட போதும் அக்­கட்­சியைப் பிரதி நிதித்­து­வப்­ப­டுத்தும் 87 மாகாண சபை அங்­கத்­த­வர்கள் இன்று இம்­மே­டையில் கலந்து கொண்­டுள்­ளனர். மகிந்த ராஜ­பக்­சவை மீண்டும் கொண்டு வர­வேண்டும் என்­ப­தற்­கா­கவே அவாகள் ஒன்று கூடி­யுள்­ளனர். அப்­படி என்றால் மகிந்த என்ன செய்தார்? மகிந்த முத­லா­வ­தாக பிரி­வ­டை­யாத ஒரு நாட்டை ஆட்­சி­செய்தார். அடுத்­த­தாக மற்­ற­வர்­களால் முடி­யாது என்று கைவி­டப்­பட்ட யுத்­தத்தை வெற்றி கொண்டார். இதுவே அவர் செய்­த­வை­க­ளாகும்.
ஆனால் இவை இரண்­டையும் செய்ய முடியாத ரணில் இன்று ஆட்சியில் உள்ளார். ரணில், மைத்திரி கூட்டு மூலம் பெரும்பான்மைப் பலத்தைப் பெறமுடியாது. ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இடது சாரிகளுடன் கூட்டுச் சோ்ந்த ஒவ்வொறு காலத்திலும் பெரும்பான்மையைப் பெற்றுள்ளனர்.
நாம் வெற்றிலை சின்னத்தில் போட்டியிட்டோம். எமக்கு பொதுமக்கள் வாக்களித்து பாராளுமன்றம் அனுப்பினர். ஐக்கிய தேசியக் கட்சிக்கு பக்கத்துணையாக நின்று அவர்கள் ஆட்சிபுரிய எம்மை அவ்வாறு அனுப்பவில்லை. எனவே எமது வாக்களர்களின் எதிர்பராப்பை நாம் நிறைவேற்றவேண்டும்.
நாம் ஒரு போதும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை இரண்டாகப் பிரிக்க வில்லை. ஏனெனில் இங்கு இருப்பவர்களில் அனேகர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியைச் சொ்ந்தவர்கள்.
Disqus Comments