அடுத்த தேர்தலுக்கு முன்னர் தேர்தல் முறைமையில் மாற்றம் செய்யப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தேர்தல் முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு ஐக்கிய தேசியக்கட்சியும் இணங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்திலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
புதிய அரசியல் அமைப்பின் ஊடாக, நிறைவேற்று அதிகாரகொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இதேவேளை,; கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பிலான தனது உடன்பாட்டை வெளியிட்டுள்ளார்.
.jpg)