உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் பங்களாதேஷ் அணி வீரர்கள் அபாரமாக விளையாடி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 275 ஓட்டங்களை அதிரடியாகக் குவித்தனர். இங்கிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக 276 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இன்றைய போட்டியில் சதமடித்ததன் மூலம் உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் சதமடித்த முதலாவது பங்களாதேஷ் அணி வீரர் என்ற சாதனையை மஹ்மதுல்லா படைத்மை குறிப்பிடத்தக்கது. அத்துடன் முஷ்விகூர் ரஹிம் 89 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.
