புத்தளம் கல்பிட்டியில் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில் 24 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கல்பிட்டி -பலாவி பிரதான வீதியில், கல்பிட்டியில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற பஸ் ஒன்றும் கல்பிட்டியில் இருந்து அனுராதபுரம் நோக்கி சென்ற பஸ் ஒன்றும் மோதியதனாலேயே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் காயமடைந்த 24 பேரும் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் இருவரின் நிலை கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இரு பஸ்ஸினதும் சாரதிகள் கைது செய்யப்பட்டதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.